பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 லா, ச. ரf .

மூத்தாள் ஆவியும் உன் ஆத்தாள் ஆவியும் என்னைச் சுத்திக்கிட்டேயிருக்கும்.”

இருளில் என் சத்தம் எனக்குக் கேட்டது. ஆனால் அது சிரிப்பா, அழுகையா?

‘என்ன முத்தையா நீ என் ஆத்தாளைப் பார்த்திருக் :**

‘உன் ஆத்தாளை நான் பார்த்துத் தான் ஆவனுமா என்ன ? ஒண்ணு வெச்சுக்க, அம்பி நீ நல்லாயிருந்தால் தான் நான் நல்லாயிருப்பேன். அதனால் நீ நல்லாயிரு. கனும்”

எனக்கு உடம்பு சிலிர்த்தது. ஒரு விதமானபயத்தில்,

அவன் அப்படிச் சொன்னதுமே வானத்தில் ஒரு நஷத்ரம் ஒளி பிதுங்கிற்று.

சத்யம் தன் மேலேயே தீர்ப்புச் சொல்லிக் கொள்கிறது.

சத்யத்தின் ரூபதரிசனம்

(தெய்வத்தின் அர்ச்சனை நாமாவளிகள் ஒவ்வொன் றாக இப்படித்தான் தனித்தனிசமயத்தில் உண்டாகி, பிறகு ஒன்றாக அடுக்கியாகியிருக்குமோ ?)

அவன் போன பின் எந் நேரம் நிலைகலையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தேனோ? நேரம் போனதே தெரியவில்லை. அப்படித் தீவிரமாக என்ன சிந்தித்தேன்? வடிவோ, வார்த்தைகளோ திண்ணமாகத் தெரியவில்லை.

கோமுவும் நானும்

காமுவும் நானும்

முத்தையாவும் நானும்

முயல் குட்டியும் நானும்

கடவுளும் நானும்

நீயும் நானும்

யாவும்