பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 @7 * grr

தழும்புகூட நிற்கலாம். அதன்மேல் எனக்கு இப்பவே ஆசைவந்துவிட்டது.

நான் உதை பட்டச் சக்கை - ஆனால் அதன் பரிசு கன்னத்தில் புருஷத் தழும்பு.

இஷ்டப் பட்டுச் சம்பாதித்த தழும்பு. உலகில் எதுவுமே இலவசமில்லை. மேலே ஏதோ நிழல் நிழலா? இருளா? நான் தழும்புடன் வாழ ஆசைப் பட்டாலும் உன்னுடன் வாழ்ந்தது போதும் என்று காயத்துக்கும் என்னின்று வெளிப்பட்டு விட்ட மூச்சா ? -ஐயையோ நீயா ? திரும்பி வந்துட்டியா ? ஏதேனும் இடம் விட்டுப் போச்சோன்னு சந்தேகமா ? சந்தேகமே படாதே நீ ஒரு இடம் கூட மறக்கல்லே. ஏகலைவன் அம்பு. அரைகுறையே வேணாம் ஒரு வழியா முடிச்சுட லாம்னு வந்துட்டியா ? அப்போ சரி

‘இல்லை அம்பி : நான் முத்தையா ?” முத்தையா தேம்பினான். “நான் நெனச்சேன் நெனச்சேன். இப்படி ஒண்னு நடக்கப் போவுதுன்னு என்னவோ தோணிச்சு. இருப்புக் கொள்ளல்லே, ஒடி வந்தேன். ஆனால் ஏமாந்து போயிட் டேனே !’

விக்கி விக்கி

‘ஐயையோ, என்னைத் தொடாதே ” அலறினேன் என் குரலே எனக்கு அடையாளம் தெரியவில்லை தொண்டையில் சிக்கிக் கொண்டது.