பக்கம்:கழுதை அழுத கதை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഴ്ത്ത് ജാഥ് ഠ്ജു്

வில்வமொடு, பிண்டி, களா,

விண்தடவும் நாவல்-எனும்

காட்டு மரவகையும்

கன்னாபின் னாவென்று, நீட்டுங் கிளைகளொடு

நெட்டையுமாய், குட்டையுமாய், 880 ஒன்றோடு மற்றொன்று)

உரசி உறவாடிப் பின்னிப் பிணைந்து

பெருங்காற்றும் சூரியனும் உள்ளே வராதபடி,

ஓங்கி அடர்ந்திருந்து,

பள்ளமுமாய் மேடுமாய்

பாதை தெரியாமல், நீளக் கிடக்கும்

நெடுங்காட்டி னுட்புகுந்து, 885 மாள நடக்கும்

வகைபோல் நடந்ததுவே!

கல்லார் மனம்போல்

கருமையிருள்! அவ்விருளில்

பொல்லார் மனம்போல்

புதைகுழியும் முட்புதரும்!

உள்ளுக்குள் பாம்போடும்;

அட்டை உருண்டிருக்கும்;

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/129&oldid=666342" இலிருந்து மீள்விக்கப்பட்டது