பக்கம்:கழுதை அழுத கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の@の22ラ ダ@agタ óの2多

2. "நம் பிறவி மட்டமென்று நாட்டுமக்கள் எண்ணிவிட்டார்

"இம்" என்று கேட்டால்தான் பேச்சில் இனிப்பிருக்கும்!" (193-194)

3. "ஊன்பிறவி தன்னில் நாம் ஊத்தைப் பிறவியடி

"இம்" என்று கேள் நீ! இதற்குமொரு தோது சொல்வேன்!" (220-221) என்பன, இவை பயிலுமிடங்கள்!.

"உம்" என்பது, ஒத்து இசைவு கூறும் ஒலியீடாகவும் தமிழில் வரும். இதனையும் ஈரிடங்களில் தம் பாவியத்தில் - ஏற்ற இடங்களில் ஏற்றிவைத்துள்ளார்!. அவை, -இவை!

1. "ஒத்ததுங்கள் உள்ளமெனில் 'உம்'மென்று சொல்லுங்கள்” (1037)

2. "ஒன்றும் மறுப்பிலதாய் 'உம்'மென் றிசைந்தது" (1043) வெறுப்பு உணர்ச்சிக் குறிப்புச் சொற்கள்.

வெறுப்பு உணர்ச்சியைக் குறித்துவழங்கும் சொற்கள் பலவற்றையுங்கூட உரிய இடங்களில் மிக அழகாக இக் கதையிலக்கியத்துள் பதித்துள்ளார், ஆசிரியர். "சீ சீ! சீ (796), தூ! தூ! துர (149), துத்துத்து" (1796) - என இயற்கையான முறைகளில் இவை பதிவெய்தியுள்ளன! ஒப்பொலிகளாகிய - ஒலிக் குறிப்புச் சொற்களைப் பயன்படுத்தும் அழகு!.

வற்றிக் கிடக்கும் தாய் மடியில் - குட்டி தன் வித்துப் பாலை உறிஞ்சுகின்றது! அதாவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/13&oldid=665312" இலிருந்து மீள்விக்கப்பட்டது