பக்கம்:கழுதை அழுத கதை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ശ്ലേ കു് ശ്ലേ

உள்ளம் திகைத்தே

உடல்நடுங்கி நின்றிருந்த கள்ளமிலாப் பெண்கழுதை

காலடியில் ஒருருவம் வந்தே உராய்ந்திடவும்,

வாலைச் சிலிர்த்தபடி 915 உந்திக் குதித்தே

உயிர்குலைந்து கீழ்நோக்க, வல்லரிமா ஒன்று

வயிற்றால் தரையூர்ந்து, மெல்லவே வாலசைத்து,

மேல்நோக்கிப் பார்த்தபடி கண்களிலே நீர்வழியக்

காலொன்றை மேல்துக்கிப் புண்னொன்றைக் காட்டி, ஒரு

பூனைபோல் காட்சிதரும்! 920

வானத்தில் வெண்ணிலவு வந்துஒளி சிந்தியதால் கானத்தின் உட்புறத்தில்

காணும் மரங்களிடை உள்ள பொருள்கள்

ஒளிர்ந்து விளங்கினவே! பள்ளம்மே டெல்லாம்

பளிச்சென்று தோன்றிநிற்கும்!

அந்த ஒளியில்

அரிமாவின் தோற்றத்தை 925

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/133&oldid=666346" இலிருந்து மீள்விக்கப்பட்டது