பக்கம்:கழுதை அழுத கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യമ്മദ്രഗു ിലന്തൂ

-உறிஞ்சும் முயற்சியாகச் சப்புகின்றது. ஆங்கு நிகழும் வினைக்குரிய ஒப்பொலிகளின்வழி - நேரிடையாகவே அக் காட்சியை யாவரும் காணும் வகையில் மிக அழகாக நம் ஐயா பதிவு செய்கின்றார்!

"ஒட்டிக் கிடக்குந் தன் தாய்மடியில் வாய்வைத்துச்

சப்புச் சப் பென்றுவாய் சப்பிச் சலித்துவிட்டே" (226-227)

என வருவன - அவ் வினைப்பாட்டுக் காட்சிக்குரிய வரிகள்!.

அதுபோலவே, - பாலினைச் சுவைத்து உண்டு

மாந்தர் மகிழும் காட்சிக்கென - அச் சுவைத் துய்ப்புக் குரிய ஒப்பொலியாகிய "இச் இச்" எனும் இரட்டைக் கிளவியை யிணைத்து இன்புறுத்துவார், ஓரிடத்தில்!

'இச்சிச் சென மாந்தர் எல்லாரும் உண்டிடவே" (180)

என்பது, அக் காட்சிக்குரிய வரி!

ஒலிக் குறிப்புச் சொற்களை நிரம்பிய அளவில் பயின்று கதைச் சுவையூட்டத்திற்கு வழிகோலியிருத்தல்.

கதைக்குச் சுவையூட்டந் தருதலில் ஒலிக் குறிப்புச் சொற்களின் பங்கு - அடிப்படைகளுள் ஒன்று! கதை கேட்கும் குழந்தைகள் அதில் விறுவிறுப்பாக நாட்டஞ் செலுத்துதற்குரிய அடிப்படைக் கிளர்ச்சியைத் தூண்டும் தகைம்ை - இவ்வகைச் சொற்களின் பொதுஇயல்பு! இவ் வொலிகள் கதை கேட்குநர் க்கு ஆழ்ந்த ஈடுபாட்டையும் - அக் கதையை உள்வாங்குதற்கேற்ற ஈர்ப்பையும் நல்க வல்லன. இவற்றின் பயன்பாட்டிையும் திறனையுமுனர்ந்த நம்.ஐயா அவர்கள்-இவ் வகை, ஒலிக் குறிப்புச் சொற்களை நூல் முழுவதும் பலபடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/14&oldid=665314" இலிருந்து மீள்விக்கப்பட்டது