பக்கம்:கழுதை அழுத கதை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの2ó ダ@agラ 之列の2多

கீழே இறங்கியதும்

காடே கிடுகிடுக்க, பாழ்வெளியைத் தாண்டியொலி

பாய, இடிக்குரலில் 1100 வன்முழக்க மிட்டு, - "இங்கே

வாரீரோ தோழர்காள்!" - என்றுரக்கக் கத்தியது!

எல்லாப் புறத்திருந்தும் ஒன்றொன்றாய்ப் பெண்ணரிமா,

உளிவுகிரின் வெம்புலிகள், குன்றொத்த யானையினம்,

குள்ள நரியினங்கள், ஒட்டைச் சிவிங்கியினம்,

ஒநாய், கரடியெலாம் #05 மொட்டைப் பெரும்பாறை

முன்வந்து கூடினவே!

ஆணரிமா அங்கே

அமர்ந்திருக்கப் நற்கழுதை காணாமற் போன, தன்

குட்டி தனை நினைந்தே அன்பால் மருகி

அகத்தே மிகவருந்தித் துன்புருவாய் அக்கழுதை

நின்றிருக்கும் தோற்றத்தைக் 1110 கண்ட விலங்கினங்கள்

'காட்டரசன் உண்ணுதற்குக் கொண்ட இரைபோலும்'

என்றெண்ணிக் கொண்டனவே!

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/153&oldid=666366" இலிருந்து மீள்விக்கப்பட்டது