பக்கம்:கழுதை அழுத கதை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óg??eタ ダ@2多 のの2多

பேச்சென்ன பேச்சு!

பெரும்பாலும் மக்களிடை பேச்சடக்கம் கொண்டவரைப்

பேரறிஞர் என்கிலையா? அந்தப் படிக்கே -

அறிஞரென்பார் நாம்தாமே! சொந்தப் படிப்பெல்லாம்

சூழ்ச்சிக்கே தானுதவும்!

ஒப்பற்ற கொள்கை .

உழைத்துண்போம் என்பதுவே! 1195 தப்பலுண்டா அக்கொள்கை,

நம்வாழ்வில்? தாழ்தலுண்டா? கொள்ளை யடித்துக்

குவிக்கின்ற வன்செயல்மேல் வெள்ளை யடித்தே

அறமென்று விம்புகின்ற மொள்ளைப்பேச் செங்களிடை

முள்ளின் நுனியுண்டா? நொள்ளை வழக்கத்தை

மாந்தரைப்போல் யார்தொடர்வார் ? foo()

அன்புண்டா? நேர்மையுண்டா?

ஆசையற்ற தொண்டுண்டா? தென்புண்டா நெஞ்சில்?

திருடாத எண்ணமுண்டா? ஒற்றுமை உண்டா?

ஒழுங்குண்டா மக்களிடை? வெற்றுச்சொல் வீச்சல்லால்

உண்மை வினையுண்டா?

120 . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/161&oldid=666374" இலிருந்து மீள்விக்கப்பட்டது