பக்கம்:கழுதை அழுத கதை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഠഭൂഗു മലമ്പ്ലേ

கூட்டத் திடைநுழைந்தோர் குள்ளநரி ஆங்குவந்து வாட்டத் துடன்நிற்க,

"வந்ததென்ன? கூறிடுவாய்" 1300

என்றே அரிமா

இடிக்குரலில் கேட்டதுவாம்! நின்ற நரிக்குக்

கழுத்தில் நெடுங்காயம்! காயத்தில் செங்குருதி

இன்னும் கசிந்திருக்கும்! வாயருகில் கொஞ்சம்.

குருதி வடிந்திருக்கும்! குள்ளநரி மெல்லவே

கூறுதற்கு வாய்திறந்து, 1305

“முள்ளென் பிடரிமயிர்

மொய்த்தபெருந் தோளரசே! என்னென்று சொல்லுவேன்

என்துயரை?” என்றிடவும், 'என்னே உளறுகிறாய்?

ஏதென்று சொல், உடனே!" என்றரிமா கேட்க

எதிர்ந்த நரிநடுங்கி, ஒன்றொன்றாய்ச் சொல்லவிழ்த்தே

ஊளையிட்டுத் தானுரைக்கும்: 1400

"வல்ல விலங்கரசே!

வானடர்ந்த காட்டிலுள்ள

131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/172&oldid=666385" இலிருந்து மீள்விக்கப்பட்டது