பக்கம்:கழுதை அழுத கதை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ലാണു് മലന്തൂ

தாழை விரிந்து

தரைமூடிக் கொண்டிருக்கும்! f415

வாழை செறிந்திருக்கும்;

வாகை நிழல்கவிக்கும்!

அந்தமரக் காவில் x

அடியேன் அமர்ந்திருந்தேன்!

வந்ததங்கே வால்சுழற்றி

வன்காளை மாடொன்று!

கூர்த்தவிரு கொம்புகளும்

கொல்லுமிரு வேல்விழியும்

ஆர்த்தவொரு பேரொலியும்

ஐயாவே, என்சொல்வேன்! £420

வந்துநின்ற மாட்டின்

வரலாறு கேட்டதற்குத் தந்த உதையாலென்

தாடை கிழிந்ததையா! கொம்பொன்றால் என்கழுத்தில்

குத்திவிட்ட காயமிது!

வம்புவரு மென்றேதான்

வாயுந் திறக்கவில்லை; மாடுவந்து தாக்கியதும்

மன்னா, வருத்தமில்லை! 1425 காடெனக்குச் சொந்தமென்று

கத்தியது தான்வருத்தம்!

133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/174&oldid=666387" இலிருந்து மீள்விக்கப்பட்டது