பக்கம்:கழுதை அழுத கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó@の2ó 学@22ラ óぬó

கொண்டு பட்டுத் தெறித்திருக்கின்றமையைக் காணலாகும்.

1. "பின்னிப் பிணைந்து பெருங்காற்றும் சூரியனும்

உள்ளே வராதபடி ஓங்கி அடர்ந்திருந்து" (882-883) 2. "புட்கள் நுழையாப் பொதிந்த தழையிலைகள்" (1068) என்பன, அவ்விரு பதிவிடங்கள்!

"இளமரக் காட்டின் தழைத்த பகுதியில் வெயில் நுழைந்ததில்லை - ஆனால் குயில் நுழையும்" என்பது, பெரும்பாணாற்றுப்படையில் வரும் கருத்துவரி1 அக் குயில் போலும் பறவைகள் எவையும் நுழையவே இயலாதவாறான பொதிவார்ந்த தழையிலைகள் செறிந்த கானப் பகுதி யிது - என்னும், இப் பாவலரேறு ஐயா அவர்களின் செறிந்த வண்பார்வை - அக் கழக இலக்கியப் பாவலரின் பார்வையினும் வேற்றுக் கோணத் திறச் சிறப்புடையதாகவே திகழ்கின்றது!

இலைகள் அற்றுப்போய்ப் - பூக்கள் பூக்கத் தொடங்கிய இலவ மரத்தின் காட்சி - மகளிர் எடுத்த விளக்கு வரிசை போலத் தோன்றின. (அகம் , 11 : 2-5); - இலையில்லனவாய் இலவ மரங்கள் ஒருங்கே மலர்ந் திருப்பது பெருவிழாவுக்கு (கார்த்திகை) இடும் விளக்குப் போலக் காணப் பெற்றது (அகம் : 183 11,12); - இலவத்து முதிர்ந்த பூக்கள் - விழாக் கோலம் பூண்ட் ஊரில் ஏற்றப்பெற்ற நெய்விளக்கின் சுடர், விழுவதுபோலக் காற்றால் உதிர்ந்தன (அகம் , 17 17-20); -இலவத்தின் மலர்கள் எரி தளிர்த்தாற்போல் தோன்றும் (அகம் : 243 : 14-16) - இலவத்தின் கொத்தான பூக்கள் வெப்பக்காற்று வீசுகையினாலே இடியில் தோன்றிய

بیسیسیاسانیان -------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/23&oldid=665335" இலிருந்து மீள்விக்கப்பட்டது