பக்கம்:கழுதை அழுத கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の@の2多 学g2ó óの225

தெய்வத் திருக்குறள் - தேர்ந்த அறநூல் - வாழ்க்கைக்கே உய்வுதரும் உற்ற உயர்நூல் என்பன, அப் பதிவிடங்களிற் சில, குறட் கருத்துகளின் சாற்றுப் பிழிவுகளும் - நூலுள் பல்லிடங்க ளில் பதிவுற்றுள்ளன. "குடம்பை தனித்தொழியப் புள்பறந்தற்றே" குறள் , 338) என்னும் குறட்கருத்துச் சாறு, இப் பாவியத்துள் "கூட்டிலுள்ள ஆவி குடிபெயர்ந்து போவதுபோல்" (854) என்னும் படிவாகப் பிழிவுற்றுள்ளது. அதுபோல், "அளவிறந்து ஆவதுபோலக் கெடும்” (குறள் : 283) எனும் குறட்கருத்தின் சாறு, "அந்நாள் வரையிலும் ஆக்கம் போல் வீழ்விருக்கும் (705) எனும் படிவில் பிழிவாகி யுள்ளமையையும் காணலாம்!

திருக்குறள் அறநெறிப் பிடிப்பிலேயே தோய்ந்து மூழ்கிக் கிடந்த மனத்தினராயிருந்தமையால் - ஆக்க வெளிப்பாடுகளில் இத் தகு நல்லோதங்களாகச் சாரலடிக்கை இயல்பானதுதான்!. அவ்வியல்பின் உண்மையை அவரின் அனைத்து எழுத்து ஒட்பங்க ளிலும் நிரவலாகக் கதிர்வீசுவதை உற்று உள்நோக்குநர் உணர்ந்து மகிழ்வர்!

இப் பாவியத்தின் சில்லிடங்களில் - திருக்குறளிற் பயிலும் சொற்கள் சிலவும் தெள்ளிதாகப் படிவெய்தி யுள்ளன. "வல்விலங்கின் வாய்க்கு வருவிருந்தாய்ப் போனாளோ?” (843) என இப்பாவியத்துள் வரும் ஒரு வரி, "வருவிருந்து பார்த்திருப்பான்" (86) எனுங் குறள் வரியை நமக்கு நினைவுபடுத்தக் காணலாம்! ஏனெனில், அது குறட் சொல்! அதுபோல், "சாந்துணையும்” (துன்பந்தான்) (449) என வரும் பதிவுச் சொல்லும் - "சாந்துணையும்” கல்லாதவாறு (குறள் : 397) எனுங் குறள்வரியை நினைவுறுத்தக் காணலாம்!

مسـ5٤يL :سسسه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/25&oldid=665340" இலிருந்து மீள்விக்கப்பட்டது