பக்கம்:கழுதை அழுத கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

മ്യു ു് ശ്രൈ

துழலில் நுண்ணிதாக உணர்ந்துபார்க்கும் திறத்தவரே உணரவியலும்! இவ் வுண்மை - கழக இலக்கியத்திலும் ஓரிடத்தில் பதிவுற்றுள்ளது. (பாவியக் கொத்தின் - ஓரிடத்தில் - "காதகம் கனல” என்றவாறு ஐயா அவர்கள் பதிவு செய்துள்ளமையும் இவ்விடத்தில் கருதுதற்குரியது) அவ் வுணர்ச்சியுணர்வின் உண்மை - இப் பாவியத்துள்ளும் 'காதில் கனல்பாய” (229) எனும் வரியொன்றில் அழகுறப் பதிவுற்றுள்ளது!

அரிமாவுக்குச சினம் ஏற்படுகின்றது. அப்பொழுது - அது கொள்ளும் உணர்ச்சியின் பாரிய அடையாளமாக - அதன் முக்குத் தொளைகள் அகலினவாக விரிவுறுகின்றன எனும் காட்சியீடு - கண்ணுற்றுணர்ந் தாராலேயே முன்வைக்க இயலுவதாகிய அரிய பதிவாகும்.

"முற்றிய வன்சினத்தால் மூக்குத் தொளைவிரியச்

செம்மண் முகமாறிச் செவ்வாணம்போல் சிவக்க...'

- (1436-1437)

என வரும் ஐயா அவர்களின் வரிகள் - அரிமாவின் சினத்தையும் சீற்றத்தையும் அவற்றின் காரணமாக முகனுறுப்புக்களாகிய முக்குத் தொளைகள் விரிவூற்றையும் - முகநிற வகை மாற்றத்தையும் அழகிய நேரீட்டுக் காட்சியாகவே முன்னிறுத்துகின்றன!

மக்கள். மாக்கள்.

இக் காலத் தமிழ்மக்கள், -தம் வாழ்வியல் ஒழுங் கழிந்தும் பண்பு குலைந்தும் தத்தமக்குள் வேற்றுமைகள்

பாராட்டிக் கொண்டு வீணே இழிந்து தாழ்ந்துகிடக்கும் கீழ்நிலைகளையெல்லாம் நம் ஐயா அவர்கள் எண்ணி

Commons sibiBOT (பேச்சு) 12:12, 5 மார்ச் 2016 (UTC)â,_öir ~~–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/27&oldid=665344" இலிருந்து மீள்விக்கப்பட்டது