பக்கம்:கழுதை அழுத கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の列gタの22ラ 学@。多 óの22ラ

இன்ன வகையினரான கொடிய மாந்தரை - விலங்குகளைவிட்டுக் கொன்று - அவற்றிற்குரிய, உணவாகவே செய்துவிடவேண்டும் என்ற தம் உள்ளக் குமுறல் சான்ற ஆழ்மனவிருப்பத்தைக் கதைப் பாவியத்துள், ஐயா அவர்கள் பதித்துள்ள இடம்மிகவும் அழகுடையது!

இப் பாவியத்தின்- ஓரிடத்தில்- காட்டரசனாகிய அரிமா - மற்ற விலங்குகளை அழைத்து இவ்வாறு அன்புடன் அறிவுறுத்துகின்றது!

"நம்மில் சிலர்போய் நகரத்தில் வாழ்கின்ற

மக்களெனும் நாகரிக மாக்களிலே சிற்சிலரைத் தக்கபடி கொண்டுவந்து - தான் தின்னல் வேண்டும், இனி" (1550-1552) அவ் அரிமா - அவர்கள் (அந் நாகரிக மாக்கள்) யார் -யார் என்றும் அடுத்துப் பட்டியலிட்டுச் சொல்கின்றது. "பொல்லா அறக்கொடியோர் பொய் புனைந்து வாழ்ந்திடுவோர்;

இல்லாத ஏழையரை எத்திப் பிழைத்திடுவோர்; கன்னியரைக் கற்பழிப்போர் கையூட்டு வாங்கிடுவோர்; துன்னக் கொலைவிளைப்போர்; போலித் துறவியர்கள்; கல்லாத மூடர் கயவர்; பெருங்களியர் - எல்லாரும் நாம் உண்ணற் கேற்ற விலங்குகளாம்! அத்தகையோரைத்தான் அருந்தல்வேண் டும், இனி, நாம்!” . (1557-1563) ஐயா அவர்களின் அறச் சினத்தோடு கூடிய உள் விருப்பம் - அரிமாவின் (மேற்சுட்டியுள்ள) இவ்வகைக் கட்டளைக்குள் கட்டமைந்து கிடப்பதாகவே நமக்குப்

படுகின்றது!

-ந:0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/31&oldid=665354" இலிருந்து மீள்விக்கப்பட்டது