பக்கம்:கழுதை அழுத கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●ラ@タの2gタ ダ@22万 2うの22ラ

வின் விருப்பத்தால் காட்டுக்கே அமைச்சராகப் பதவி யேற்ற பின்-கான்விலங்குகளிடையே உரையாற்றுகையில்

"தீங்கிறந்த நல்லுளத்துத் தென்னாட்டுப் பெண்கழுதை” (1172) என அதனை ஆசிரியர் குறிப்பிடுமிடத்தில் வரும் "தென்னாடு” எனும் அடைமொழியுள் -தன் நாட்டுப் பெருமிதவுணர்வைப் பதித்துவைத்துள்ள தனிஇ அழகு - அவரின் கொள்கையொடு பொருத்திப் பார்க்க வேண்டிய கூறேயாகும்!

கழுதைகளுக்கான பெயரீடுகளிலும் தூயதமிழ்!.

இக் கதையுள் வரும் காளை, தனக்குத் தொடர்புடைய பிறிதொரு ஆண்கழுதையைப் பற்றி இக் கழுதையம்மை யிடம் கூறுகின்றது! அக் கழுதையின் பெயர் "வேங்கை” (394) என்றும் - அக் கழுதைக்குத் தந்தையின் பெயர் "பொன்னான்" (393) என்றும் - அப் 'பொன்னான்" எனும் கழுதையின் மனைவியினுடைய பெயர் "பூவாய்” (393) என்றும் அதனதற்குமுரிய பெயர்களாக அது அறிவிக்குமிடங்களில் - விலங்குகளுக்குரிய பெயரீடுக ளையுங்கூடத் தூய தமிழ்ப் பெயர்களாகவே அமைத்துள்ள போக்கிடையில் நம் ஐயா அவர்களின் கொள்கை நோக்கக் கடைப்பிடியையே நம்மால் காணவியல்கின்றது.

துணையிலையேல் வினை சிறவாது!.

கொள்கையாளன். ஒருவனுக்குத் துணைவலிவு என்பது இன்றியமையாததாகும். அன்றேல் - அவனின் வினை சிறவாது-விளைவும் பரவாது என்னும் கருத்தைத் தம் தொண்டர்கள் யாவரிடத்தும் அடிக்கடி வலியுறுத்தி அதற்கெனத் தொடர்ந்து வேண்டுகோள்களிட்டே இறுதி வரை நொந்துவந்த நைந்த நெஞ்சினராகிய நம் ஐயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/37&oldid=665370" இலிருந்து மீள்விக்கப்பட்டது