பக்கம்:கழுதை அழுத கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óのの2タ ダ@2多 óの2eク

ஐயா அவர்கள் தாம் எழுதிய பாட்டொன்றில் - குழந்தையொன்றன் தோற்றம் இயல்பாக ஏற்படுத்தும் இன்பக் கிளர்ச்சியையும் உவகையெழுச்சியையும் விளக்கி வியப்புற்றவாறே - இறுதிப் பகுதியில் இவ்வாறு முடிப்பார். அப் பாப்பகுதி இது.

'பொக்கைவாய்ப் பூமணத்தை மோந்து மோந்து பூச்செண்டு மேனியின்மேல் முகத்தால் நீந்திச் சொக்கும்.உளம்! சொக்கும் உயிர்! சுழலும் எண்ணம்! சொல்லழியும்; நினைவழியும்! சொந்தம் மாயும்!”

(குழந்தையொன்றைத் தழுவியணைத்து அதன் பற்களிலிலாத வாயுள் மீமெல்லிதாகக் கமழ்கமழ்க்கும் பூநறுமணத்தைத் திரும்பத் திரும்ப மோந்தவாறு - அம் முகத்தோடு நம் முகத்தைப் பொருந்தவைத்து நீந்திக் கிடக்கும்போது உள்ளமும் சொக்கிக் கிடக்கும்; உயிரும் சொக்கி முழ்கும்! எவ் எண்ணமும் ஒருநிலைப் படாது சுழன்று கொண்டிருக்கும்! சொல் என்ற ஒன்றே அங்கிருக்காது - அது அழிந்தே போகும்! நினைவு - கினைவு எவையும் அங்கிரா! யாவும் அழிவன ஆகும்! சொந்தம் - பந்தம் என்றவாறான நிலைகளெல்லாம் ஒட்டுமொத்தமாக மாய்ந்து நின்றுவிடுகின்ற ஒன்றிய ஓர் எல்லையற்ற பேரின்பநிலை மட்டுமே ஆங்கு இருக்கும்.)

நம் ஐயா அவா.களின் இத்தகைய வெளிப்பாட்டுப் போங்கில் குழந்தைகள் மீதான அவரின் பாசநேசப் பாரிய வணர்ச்சிகளின் எல்லையற்ற இயல்புத் தோய்வை ஓர்

எளிய உணர்வாளனும் தெளிதாய் உணருவான்!

இத் தகு இயல்பு உணர்வுக்குச் சொந்தக்காரரான நம் பாவலரேறு ஐயா அவர்கள், நந்தமிழ்க் குழந்தைகளுக்

مسلم- پBi-سسم۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/7&oldid=665297" இலிருந்து மீள்விக்கப்பட்டது