பக்கம்:கழுதை அழுத கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

യ്യഠഭൂഗു ിലുസ്ത്

கென - சிறார் சிறுமியர்க்கென - இளைஞர்க்கெனப் படைத்தளித்துள்ள கவின்கல்விய கதைப்பாவியம், இது! அத்துடன் -கல்விவல்ல பெரியோரும் சுவைத்து மகிழும் வகையிலுமாக மிக நுண்ணுட்பமாக ஆக்கப் பெற்றுள்ளது. இக் கதை, சிறியோரும் பெரியோருமாகப் படிக்க வேண்டிய ஓர் உருவகக் கதை-என்றவாறு நம் ஆசிரியர் (தமிழ்ச்சிட்டு இதழில் - தொடர்நிலைப் பாவியமாக வெளிப்படுத்திய பொழுது- அடிக் குறிப்பொன்றில் பதித்துள்ளமை ஈண்டு எண்ணத் தக்கது. அக் குறிப்பு வரியுள்-சிறியோரை முன்னும் - பெரியோரை அடுத்தும் அடுக்கியிருக்கும் பாங்கும் உடன் ஒப்பக் கருதத்தக்கது

திண்மையும் ஒண்மையும் நுண்மையும் செறிவுறு மாறு தேர்ந்தெடுத்த தெள்ளிய தொன்சொற்களால் அறிவு நுட்ப நுழைபுலத்தாரையும் திணற அடிக்கவல்ல அருந் திறஞ்சான்ற நம் பாவலரேறு ஐயா அவர்கள் - இப் புனைவு இலக்கியத்துக்குரிய துய்ப்புத் தோய்வாளியரான சின்னஞ் சிறிய நந்தமிழ்ப் பிஞ்சினரின் நுகர்வுத் திறனுக்கேற்றவாறான மிக்கெளிய தெள்ளிய கட்டமைப் பொழுங்கில் இதனைச் சமைத்திருக்கும் பாங்கு - மீமெல்லிய எழில் அமைவுடையது!

'பறக்கின்ற பறவை கால்களால் நடப்பதைப் போல..." என்றவாறு பாட்டுணர்வு என்னுந் தலைப்பில் (கற்பனை ஊற்று பக்கம் , 92) ஓர் அருமையார்ந்த உவமை கூறிய ஐயா அவர்கள் - அக் கருத்துக்குத் தாமே உவமையராகித் தம்மின் பாப்பறப்பு வன்திறச் சிறகுகளை நனியொடுக்கிக் கொண்டு இப் படைப்புக் களத்திடையே எண்மை நடையியன்றிருக்கும் அழகு - தனிஇச் சிறப்பு வாய்ந்தது! . . . . . W. . . .”

سببسrوھب بس۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/8&oldid=665300" இலிருந்து மீள்விக்கப்பட்டது