பக்கம்:கழுதை அழுத கதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഗ്യഗുണ്ടൂ ു്

வெள்ளையெல்லாம் பாலென்பார் ! வேட்டியெல்லாம் நூலென்பார் !

இத்தகைய மக்கள்தாம் - ஏமாற்றி வாழ்பவர்தாம்,

மெத்தப் பெருமைகளை

மேன்மேல் பெறுகின்றார்!

விண்ணிலுள்ள மீன்களையும்

விரல் விட்டே எண்ணிடலாம் !

மண்ணில் பணஞ்செய்யும்

மாற்றத்தை எண்ணுவதார் ? 550

அப்பணத்தின் ஆட்சிக்(கு)

அரசரிவர் என்சொல்வேன்"

- இப்படிச் சொல்லி,

கழுதை எதிரிலுள்ள காளையினை நோக்கிக்

"கருத்தென்ன?" என்றிடவும், 'பாளை பிளந்ததுபோல்

'உண்மை பகர்ந்துவிட்டாய் !” 555 மாலை நெருங்கிற்று;

மற்றுமுங்கள் ஏகாலி வேலை மூடித்திருப்பான்!

விடுசெல்லல் வேண்டுமன்றோ?" என்றதனைக் கேட்க,

இரண்டு கழுதைகளும் ஒன்றன் முகத்தினை மற்

றொன்றுபார்த் தேங்கினவே!

§:

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/94&oldid=665497" இலிருந்து மீள்விக்கப்பட்டது