பக்கம்:கழுமலப்போர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பாலும் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று செய்யும் போரையே பெரிதும் விரும்புவன். கரிகாற் பெருவளத்தான் ஈழநாட்டில் பெற்ற வெற்றியும், இராச இராசனும், இராஜேந்திரனும் கடாரம் முதலாம் கீழை நாடுகள் மீது கொண்ட வெற்றியும், இவ்வகையைச் சேர்ந்தனவே. காவிரிக் கரையோனாகிய கரிகாலன், கங்கைக் கரையில் பெற்ற வெற்றியும், கிரேக்கமாவீரன் அலெக்சாந்தர் இந்திய மண்ணில் பெற்றவெற்றியும் அத்தகையவே. கரிகாலன் என்ற இயற்பெயருடையோனாகிய திருமாவளவன், தமிழகம் அனைத்தையும் வென்று கைக்கொண்டு விட்டமையால், தன் தோளாற்றலை நிலை நாட்டவல்ல பெரும் போரை, அங்கு மேலும் நிகழ்த்த வாய்ப்பில்லாமை கண்டே வடநாடு நோக்கிப் போர் விரும்பிப் புறப்பட்டான் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.[1]

கடல்கடந்த பிற நாடுகளுக்குத் தமிழ் அரசர் சென்று தம் ஆற்றலை நிலை நாட்டியது போலவே, பிற நாட்டு அரசர் சிலர், தமிழ் நாட்டிற்கு அவர் ஆற்றலைக் காட்ட வந்திருத்தலும் கூடும். அவ்வாறு வந்த அரசர்களைத் தமிழ் அரசர் வென்று துரத்தியிருத்தலும் கூடும். பிற நாட்டு அரசர்கள், இந்நாட்டு ஆனிறைகளைத் தம் நாடுகளுக்குக் கொண்டு செல்வதோ, இந்நாட்டை வென்று இந்நாட்டிலேயே இருந்து ஆளுவதோ இயலாது ஆதலின், அவர்களின் போர் நோக்கம் எல்லாம் ஆற்றலை நிலைநாட்டுவது ஒன்றே ஆகும்.


  1. “இருநில மருங்கில் பொருநரைப் பெறாஅச்
    செருவெம் காதலின் திருமா வளவன்
    வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
    நாளொடு பெயர்த்து, நண்ணார்ப் பெறுக
    இம் மண்ணக மருங்கின் என்வலிகெழுதோள் எனப்
    புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்.”

    –சிலப்பதிகாரம்1 51 89-94
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/22&oldid=1359298" இலிருந்து மீள்விக்கப்பட்டது