பக்கம்:கழுமலப்போர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

துணியப் பரிமா உய்த்த தேராளன்,’ என அவன் வெற்றிகளை விளங்கப் பாடிய திருமங்கை ஆழ்வார், ‘இருக்கு இலங்கு திருமொழிவாய் எண்தோள். ஈசற்கு எழில் பாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன்’ என அவன் சிவத் தொண்டினையும் பாராட்டியிருப்பது, அவனுக்குச் சிறப்பன்றோ?

3. போர்ப் படைத் தலைவர்கள்

ழுமலப் போரில் கலந்துகொண்ட இருதிறத்துப் படைத் தலைவர்கள் எழுவராவர். அத்தி, ஏற்றை, கங்கன், கட்டி, நன்னன், பழையன், புன்றுறை என்பன அவர்தம் பெயர்கள், இவருள் பழையன் ஒருவனே சோழர் படைத் தலைவனாய்ப் பணியாற்றினான். ஏனைய அறுவரும் சேரர்படை முதல்வர்களே. சேரர் படைத் தலைவர் அறுவரே என்றாலும், அவருள் வரலாறு உணரத்தக்க சிறப்புடையான் கட்டி ஒருவனே. எஞ்சிய ஐவர் குறித்து, அவர் தம் பெயரும், அவர்கள் கழுமலப்போரில் கலந்துகொண்டார்கள் என்ற செய்தியும் தவிர, வேறு எதையும் அறிந்து கொள்வதற்கில்லை. அத்தி, நன்னன் இருவரைக் குறித்து மட்டும் மேலும் சில கூறலாம்.

அத்தி என்பது சேர இனத்தவரைக் குறிக்க வழங்கும் பெயர்களுள் ஒன்று. அத்தி எனும் அப்பெயருடையான் ஒருவன், சோழன் கரிகாற் பெருவளத்தானின் செல்வக் குமரியும், சிறந்த புலமையுடையாரும், புலவர்களாலும் புகழத்தக்க பெருமையுடையாருமாகிய ஆதிமந்தி என்பாரை மணந்திருந்தான். ஒருகால், காவிரியில் புது வெள்ளம் வரக் கண்டு சோணாட்டு மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் விழாவில் கலந்துகொண்டு புனலாடினான் அவன். அவனைக் காவிரி வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டது. ஆதிமந்தி அவனைத் தேடித்தேடி அலைந்து, ஆறாத்துயருற்றாள். எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/35&oldid=1377018" இலிருந்து மீள்விக்கப்பட்டது