பக்கம்:கழுமலப்போர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டி விரும்பினும், உடன் வந்திருக்கும் பாணன், பகைவர் சோர்ந்திருக்கும் காவம் பார்த்தே பாய்ந்து தாக்குதல் வேண்டும் என்ற போர் முறை அறிந்தவனாதலின், இருவரும் உறந்தையைச் சூழ்ந்திருந்த காவற்காட்டில் சின்னாள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

தித்தனைத் தாக்கி வெல்ல, ஏற்ற காலத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கக் காத்திருக்கப் படையெடுப்பு முயற்சியைக் கைவிட்டுப் போவதே நன்று என்ற நினைப்பு இருவர் உள்ளத்திலும், தோன்றி வலுப்படத் தொடங்கிற்று.

ஒவ்வொரு நாள் காலையிலும், இசைவல்ல பாணர்களும், இன் தமிழ்ப் புலவர்களும், போர் வல்ல வீரர்களும், வேறு பலரும் உறையூர்க் கோட்டைக்குள்ளே வரிசை வரிசையாக நுழைவதையும், சிறிது நாழிகைக்கெல்லாம், அரசன் அரியணை அமர்ந்த அரசியல் பணிகளை ஏற்றுக் கொள்வதை அறிவிக்கும் முரசொலியும், சங்கொலியும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு முழங்குவதையும், உடனே உள்ளே புகுந்தவர்கள் ஆங்குத் தித்தன் அளித்த பரிசுப் பொருள்களாய, யானை மீதும், குதிரைமீதும், தேர்மீதும் அமர்ந்து வெளிப்படுவதையும், அவர்வாய், வாரி வழங்கும் அவன் வள்ளன்மையை வாயார வாழ்த்துவதையும் காணலாயினர். வந்த சில நாட்களுக்கெல்லாம், உறந்தை நாடு வற்றாவளம் உடையது; வெண்ணெல் வயல்களை நிறையக் கொண்டது; ஆகவே, முற்றுகை எவ்வளவு நாள் நீடினும் நின்று வருந்தாது என்பதை அறிந்துகொண்டார்கள்; உறையூர்க் கோட்டையின் உறுதிப்பாட்டினை நேரில் பார்த்துவிட்டார்கள். அவ் விரண்டுமே, அவர்கள் ஊக்கத்தை ஓரளவு நிலை குலையச் செய்திருந்தன. அந்நிலையில், தித்தனின் இந்நாளோலக்கச் சிறப்பு அவர் நினைப்பை அழிக்கத் தொடங்கிவிட்டது; மக்களால் இவ்வளவு மதிக்கப்படும் ஒரு மன்னனை வெல்வது அவ்வளவு எளிதில் இயலாதே. அவனுக்கு ஒரு ஊறு நேர்ந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/40&oldid=1359798" இலிருந்து மீள்விக்கப்பட்டது