பக்கம்:கழுமலப்போர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

கோட்டை சோழர் உடைமை ஆயிற்று, செங்கணானை, வெற்றி மாலை சூட்டிச் சிறப்பித்தார்கள்.

நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,
துன்னரும் கடும்திறல் கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை, என்றாங்கு
அன்று அவர் குழீஇய அளப்பரும் கட்டூர்ப
பருந்துபடப் பண்ணிப் பழையன் படடெனக்,
கண்டு அது நோனான் ஆகித், திண்தேர்க்
கனையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணிப் பெரும்பூண் சென்னி.

—அகநானூறு : 44

சிறை பிடிக்கப்பட்ட சேரன் நிலையைக் காண்பதற்கு முன், கழுமலப் போர்க்களத்தின் கொடுமையினைச் சற்றுக் காண்போமாக.

5. களக் காட்சி

தேர்க்குடையில் யானைத் தடக்கை

தேர்ப்படையை முன்னிறுத்தி முன்னேறி வந்தது யானைப் படை. பகைவர் படைக் கலங்கள் ஊடுருவ எளிதில் உருக்குலையா உறுதி வாய்ந்தது தேர்ப்படை. அவற்றிற்கு அழகளித்து நின்றன அவற்றின் மீது கட்டப்பெற்ற வெண் கொற்றக் குடைகள், தேர்ப்படைக்குச் சிறப்பளிப்பன அவற்றின் குடைகளே என்பதைப் பகைவர் படை வரிசையில் முன்னிற்கும் வாள்வீரர் கண்டுகொண்டனர். அவர் கையில், களம்பல கண்டு வென்று வீறுபெற்ற விழுச்சிறப்பால் விளக்கம் பெற்ற வாட்படை. உள்ளத்தில் மலையே எதிர்க்கினும் மலைக் காத உரமும் ஊக்கமும். இவற்றை உறுதுணையாக் கொண்டமையால் அவ்வாட்படை வீரர், எதிர்வரும் தேர்ப்படையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/51&oldid=1377023" இலிருந்து மீள்விக்கப்பட்டது