பக்கம்:கழுமலப்போர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

கார்காலத்தில், ஆங்காங்கே முளைத்துக் கிடக்கும் காளான்கள் புல்லுணாவுண்ணும் ஆர்வம் பெருக, காடு நோக்கி விரைந்தோடும் ஆனிரைகளின் கால்பட்டு, சிதைவுற்றுச் சீரழியும் கவின் மிகு காட்சியை நினைவூட்ட, தன்னாட்டு நில நீர்வளங்களையும், தன் நாற்படையின் பேராற்றற் பெருமையினையும் எண்ணி இறும்பூதெய்தினான்.

“ஓஓ! உவமன் உறழ்வின்றி ஒத்ததே;
காவிரிநாடன் கழுமலம் கொண்டநாள்
மா உதைப்ப மாற்றார் குடை யெலாம் கீழ்மேலா
ஆ உதை காளாம்பி போன்ற, புனல்நாடன்
மேவாரை அட்டகளத்து.” —களவழி: 36.

கருடன் வாயில் கை :

வீரர்க்கும் வீரர் அவ்வீரர்களே அவர்கள் புகமுடியாத இடம் அப்போர்களத்தில் எதுவும் இல்லை. அவர்கள் விரும்பினால், அவர்களைத் தடுத்து நிறுத்த வல்லவர் பகைவர் படை வரிசையுள் ஒருவரும் இவர். ஆண்மையும் ஆற்றலும் அத் துணை மிகுதியாகப் பொருந்தியிருந்தமையால், அவர்கள் களமெங்கும் புகுந்து புகுந்து கடும் போரிட்டனர். அம்மட்டோ! அவ்வீரர்கள், போர்க்கள நிலையையும், போர் முறைகளையும் தெளிவாக உணர்ந்திருந்தனர். அதனால், படை வரிசையில் படைக்கு உயிரளிப்பது நாற்படையுள் எப்படை என்பதை நன்கு அறிந்திருந்தனர். நால்வகைப் படையுள், களிரும், தேரும், குதிரையும் பகைவரைப் பாழ் செய்வதில் பெருந்துணை புரிவனவேயாயினும், அவை தாமே இயங்கா. அவற்றை இயக்கக் காலாட் படையின் துணைவேண்டும். அது இயக்கினா வல்லது அவை இயங்கா. ஆகவே, அம்முதற் படை மூன்றினும் வீரர் படையே, படை வரிசைக்கு வேராம். ஆகவே, அவற்றை அழிப்பதினும் அவற்றை இயக்கும் வீரர் படையை அழிப்பதே வெற்றிக்கு வழியாம்; குடம் உடையான் வீழக் குடமும் வீழ்தல்போல், வீரர் அழியின், அவர் இயக்கும் அவையும் அழியும். அம் முறையால் காலக்கேடும், உயிர்க்கேடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/63&oldid=1360414" இலிருந்து மீள்விக்கப்பட்டது