பக்கம்:கழுமலப்போர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

வீரரும் வேல் வீரரும் தத்தம் அமர்த் திறத்தை அதிசயிக்கும் வகையில் காட்டிப் போர் புரிந்துகொண்டிருந்தனர். அவர் வீசி எறிந்த வேற்படைகளும், அவர் கைவில்லிலிருந்து விரைந்து வெளிப்பட்ட அம்புகளும் எதிர்வரும் வீரர் உடல்களிலும் களிறுகளின் உடல்களிலும், குதிரைகளின் உடல்களிலும் ஆழப்பதிந்து, அவ்வுடல்களில் பெரிய பெரிய புண்களை உண்டாக்கிவிட்டன. அப்புண்களிலிருந்து கொப்புளித் தொடங்கிற்று குருதி.

எங்கே குருதிவாடை வீசினும், ஆங்குத் தம் இனத்தோடு சென்று குடரையும், குடரிலிருந்து சொரியும் குருதியையும் உண்டும் குடித்தும் உயிர் வாழும் இயல்புடைய காகங்கள், குருதி ஆறு பாயும் அக்களத்தில் வந்து குவிந்தன. காக்கைகளின் குருதிவேட்கை, அக்குருதி, புண்களிலிருந்து வெளிப்பட்டு விழும்வரை காத்திருக்க விரும்பவில்லை. புண்களை விட்டுப் புறப்படும்போதே குடிக்கத் துடித்தன. அவ்வாறே வீரர் மார்பிலும் தோளிலும், விலங்குகளின் உடல்களிலும் உண்டான விழுப் புண்களைக் குத்திக் குடிக்கத் தொடங்கின. போர்வெறி மிகுதியால் மெய்ம் மறந்து போரிட்டுக் கொண்டிருந்தமையால், வீரர்களும், விலங்குகளும், காகங்கள் புண்களில் வாய்வைத்துக் குருதி குடிப்பதைப் பொருட்படுத்தினாரல்லர். அதனால் காகங்கள் குருதியை அமைதியாகக் குடித்துக்கொண்டிருந்தன.

அங்ஙனம் குடிக்கும் போது, அப்புண்களிலிருந்து புறப்படும் குருதி வேகமாக வெளிப்படுவதால், அது அக்காகங்களின், உடலை நனைக்குமளவு எழும்பி எழும்பி வீழ்ந்தது. குருதி குடிப்பதால் காகங்களின் அலகுகள் கருநிறம் இழந்து செந்நிறம் பெற்று விளங்க, கொப்புளித்து விழும் குருதியால் நனைந்து உடல்களின் கருநிறமும் மறைந்து போகச் செம்மேனி பெற்றன. அந்நிலையில், அவற்றைக் காண்பவர் எவரும், அவற்றைக் காக்கை எனக் கருதார். அலகை நோக்க மீன் குத்திப் பறவையோ எனச் சிலர் மயங்க, உடலை நோக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/70&oldid=1360448" இலிருந்து மீள்விக்கப்பட்டது