பக்கம்:கழுமலப்போர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மண்மகள் செம்மேனி :

சோழன்செங்கணான் செங்கோல் நெறி நின்று நாடாண்டிருந்தான். அவன் ஆட்சியில், என்றும் அறம் பொய்த்துப் போனது இல்லை. அதனால் அவன் நாட்டு மக்கள் அவனுக்கு மலர்மாலை சூட்டி வாழ்த்தினார்கள். அவன் அரண்மனை வாயிலில், மும்முரசுகளும் எக்காலத்தும் முழங்கின. நல்லாட்சியின் பயனாய் நாடு நிறைந்த மழைபெற்று நலம் உற்றது.

சோணாட்டின் இச்சிறப்புக்களை அறிந்தனர், சேரனும், அவன் படை முதல்வரும். அவர்க்கு அந்நாட்டின் நல்வாழ் வைக் காணக் காண, மனத்தில், பொறாமைத் தீ மூண்டது. காழ்ப்புணர்வு கிளைத்துப் படர்ந்தது. செங்கணான் நாட்டுச் செல்வ வாழ்வு கண்டு காய்ந்தனர். அதன் பயனாய்க் கழுமலப் போர் மூண்டது.

களத்தில் கணக்கற்ற உயிர்கள் மாண்டன. உயிரிழந்து வீழ்ந்த உடல்களிலிருந்து பெருகி ஓடிய செந்நீர் வெள்ளத்தால் கழுமலக்களம் செங்களமாய் மாறிக் காட்சி அளித்தது. அக்களக் காட்சியையும், அக்களப்போர்க் காரணத்தையும் காண்பவர் உள்ளத்தில் ஓர் உயர்ந்த கருத்து உருப் பெறச் செய்தது களத்தின் அச்செந்திறம்.

சோணாடு வளம் பெற்றுளது. சோணாட்டு மன்னன் வாழ்த்தப்பெறுகிறான் என்பது உண்மை. அந்நிலை அவன் நாட்டு மண்ணுக்கு மட்டும் உள்ள தனிச் சிறப்பன்று. அது எந்நாட்டு மண்ணுக்கும் உண்டு. ஆனால் அது அம்மண்ணின் நலத்தால் மட்டும் வந்ததன்று. அது அவன் அரசியல் அற வாழ்வால் வந்தது. அந்நாட்டு மக்கள் தங்கள் கடமையுணர்ந்து தொழிலாற்றுவதால் வந்தது. சேரர், இதைச் சிந்தையில் இருத்திச் செயல் புரிந்திருந்தால், அவர் நாடும் அந்நலம் பெற்றிருக்கும். அவர் நாட்டு மண்ணும் அம்மாண்பு பெற்றிருக்கும். ஆனால் நாட்டு மண்ணிடத்தில் மட்டும் நலம். இருந்து பயன் இல்லை, நாட்டு மக்கள் நினைப்பிலும் நலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/76&oldid=1360473" இலிருந்து மீள்விக்கப்பட்டது