பக்கம்:கழுமலப்போர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

வளவே, வாள் எடுத்துக் களம் புகுந்தார்கள். சேரநாட்டு வீரர் தலைகளை வெட்டி உருட்டினார்கள். தலை இழந்த முண்டங்கள், பனை மரங்கள் போல் ஆங்காங்கே அசைவற்று நிற்க, கரிய மயிர் முளைத்த தலைகள், காய்கள்போல் களமெங்கும் உருண்டு கிடந்தன. அக்காட்சி, அப்பனந்தோப்புக் காட்சியை அப்படியே காட்டிவிட்டது.

நுங்காகவும், பழமாகவும், கிழங்காகவும் பயன்பெற வேண்டிய காய்களைக் கொடிய காற்றுக் குலைத்துக் கெடுத்தது போல், பாடுபட்டும் பயன் விளைக்க வல்ல வீரர் தலைகள், அந்தோ! கொன்னே கொய்யப் பெற்றன. என்னே கொடுமை!

“திண்தோள் மறவர் எறியத், திசைதொறும்
பைந்தலை பாரில் புரள்பவை—நன்கு எனைத்தும்
பெண்ணை அம் தோட்டம் பெருவெளி புக்கற்றே,
கண்ணார் கமழ்தெரியல் காவிரி நீர் நாடன்
கண்ணாரை அட்ட களத்து.” —களவழி : 24

கந்தில் பிணித்த கோணாய் :

கழுமலக் கோட்டைக்கான இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டுளது. இரு திறத்துப் படைவீரரும் இரண்டறக் கலந்து கடுமையாகப் போரிட்டுக் கொண்டுள்ளனர். தேரோடு தேர் போராடித் தீர்த்தது. களிற்றுப் படையைக் கொன்று தீர்த்தது குதிரைப்படை. குதிரைப் படையும் கள வெற்றியைக் காணக் கொடுத்து வைக்கவில்லை. இறுதியில் எஞ்சியுள்ள இருபடை வீரர்களும் போரிட்டுக் கொண்டுள்ளனர். அவர்களும் வில்லாற்றல் வாளாற்றல்களை யெல்லாம் காட்டிப் போரிட்டுக் கடைசியில், வேலேந்திப் போரிடத் தொடங்கினர்.

களத்தில் வீசிய பிணவாடை கழுமல நகரை அடுத்திருந்த காட்டில் வாழும் குள்ள நரிகளை விருந்துக்கு அழைத்ததுபோல் ஆகிவிட்டது. ஒரு பெரிய கூட்டம் வந்து களத்தைச் சூழ்ந்து கொண்டது. போர் எப்போது ஓயும், பிணங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/81&oldid=1360509" இலிருந்து மீள்விக்கப்பட்டது