பக்கம்:கழுமலப்போர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

அவர்பால் கொண்ட மதிப்பினும், தமக்கென வாழாது, பிறர்க்கென வாழும் அவர் பேருள்ளம் கண்டுகொண்ட மதிப்புப் பெரிதாயிற்று. அந்நிலையே அவன் உள்ளம் நெகிழ்ந்தது. கணைக்கால் இரும்பொறைபால் கொண்டிருந்த காழ்ப்பு, கணப் பொழுதில் மறைந்துவிட்டது. அவனை விடுதலை செய்ய இசைந்தான். புலவரையும் உடனழைத்துக் கொண்டு, குடவாயிற் கோட்டத்திற்கு அப்போதே விரைந்து சென்றான்.

புலவர் பாடிய செந்தமிழ்ப் பாக்கள் மீது கொண்ட பற்றுள்ளத்தால், கணையன் தன் குலப் பகைவர்க்குத் துணை புரிந்தவன், தன் படைத் தலைவன் பழையனைக் கொன்ற பெரிய பகைவன் என்பதையெல்லாம் மறந்து, அவனை விடுதலை செய்ய முன் வந்த செங்கணான் தமிழ் உள்ளம் கண்டு உலகம் அவனைப் பாராட்டிற்று. அப்பாராட்டுரைகளுள் சில வருமாறு :

“பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்டகோன்.”

—இராசராச சோழன் உலா.


“பொறையனைப் பொய்கை கவிக்குக்
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்.”

—குலோத்துங்கச் சோழன் உலா.


“இன்னருளின்
மேதக்க பொய்கை கவி கொண்டு, வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திபன்.”

—விக்கிரம சோழன் உலா.


“களவழிக் கவிதை பொய்கை உரை செய்ய, உதியன்
கால்வழித் தளையை வெட்டி அரசு இட்ட பரிசு.”

—கலிங்கத்துப்பரணி.

புலவர் அரும்பாடு பட்டார்; அரசனும் அதற்கு இசைந்தான். ஆயினும் அவர் நினைந்தது நிகழவில்லை. நினைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/89&oldid=1360666" இலிருந்து மீள்விக்கப்பட்டது