பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

15

யாக விரட்டிவிட்டதால் சரோஜினி மனம் நொந்து தனது தந்தை ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வேதனைப்பட்டார்.

கணக்கு நோட்டில் தான் எழுதிய கவிதைக் கிறுக்கலைத் தொகுத்தார்! மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தார்; அந்த இன்பத்திலேயே மெய் மறந்தார் கணக்கு நோட்டில் தொடர்ந்து எதையெதையோ எழுதினார்.

பூந்தோட்டம் புகுவார்! பூத்த மலர்களின் வண்ணங்களை உற்று நோக்குவார்! அந்த இன்பத்திலேயே அவரது மனம் மயங்கும்! பிறகு! பூக்களுள்ளே உள்ள தேனைப் பார்ப்பார்! அதைச் சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும் வண்டுகளின் இசை ஒலியைக் கேட்டு இன்பம் பெறுவார்.

இங்கிலாந்து நாட்டின் பருவ மாற்றங்களால் பூக்கும் பூக்களது பலவித வனப்புகளை ஊன்றி ரசிப்பார்! ஆம் மலர்களின் நிறபேதங்கள் சரோஜினிக்குரிய பாடங்களாயின. காரணம், மங்கையின் இதயமும் மலர்கள் போன்றதல்லவா?-அதனால்!

ஒருநாள் தனது விடுதியிலே உள்ள செடிகள் மலர்கள் மலர்ந்து அழகுக்கு அழகாகப் போட்டியிட்ட வண்ணமிருப்பதைக் கண்டு, மனதைப் பறிகொடுத்தார் குமரி சரோஜினி

“பூக்களே! நீங்கள் அடர்த்தியாக, நெருக்கமாகப் பூத்திருப்பதால் செடியின் கொம்புகள் இருக்கும் இடம் புலப்படவில்லையே! பூச்சரமா? கொம்பா? என்ற குழப்பத்தை உண்டாக்குகின்றீர்களே!

பூக்களே! மனம் வீசும் உங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற கொம்புகளும்-கொடிகளும் அதிருஷ்டசாலிகள் அல்லவா? எவ்வளவு அழகாக அவை உங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற அழகே- அழகுக்கு அழகு!