பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கவிக்குயில் சரோஜினியின்

போல, சிவாஜியின் தாயார் பவானி தேவி அருள் பாலிப்பு கதைகளைக் கூறி வீரம் ஊட்டியதைப் போல, கவியரசி சரோஜினி புராண, வரலாற்றுப் கதைகளைக் கூறித் தாலாட்டித் தனது குழந்தைகளை வளர்க்காமல், தான் எழுதிய பாடல்கலைப் பாடியே தூங்க வைப்பார்.

அவரது ஆராரோ பாடிடும் தாலாட்டுப் பாடல்களின் கருத்துக்களை ஒரு முறை படியுங்கள். அப்பாடல்கள் எவ்வளவு வித்தியாசமானவை என்று விளங்கும்

"இன்னமுதே! வயல்கள், தாமரைத் தடாகங்கள், வான்முட்டும் மலைச் சிகரங்களில் இருந்து உனக்காக எனது ஆசைக் கனவுகளை ஏந்தி வந்திருக்கிறேன். கண்ணே சலிக்கும், உனது கண்களை மூடி உறங்கு’ நான் கொண்டு வந்த எல்லாக் கருத்துக்களும் உனது கனவுகளிலே வந்து இன்பமூட்டும்.

"கண்ணின் மணியே! பளபளவென்ற ஒளியோடு பறக்கும் மின்மினிப்பூச்சி, செடிகளுக்கு இடையே பறந்து செல்வதைப் பார். கொடிகளிலும், செடிகளிலும் பூத்துச் சிரிக்கும் பல வண்ணப் பூக்களில் இருந்தும் உனது மனதுக் இனிய கனவுகளைக் களவாடிக் கொண்டு வந்திருக்கிறேன். என்னை அன்போடு பார்க்கும் உனது விழிகளை மூடித் தூங்கு, நான் திருடி வந்த கனவுகள் உன்னைத் தூக்கத்தில் இன்பப்படுத்தும்."

"அன்பே நிலா விண்வெளியில் உலா வருகிறது; விண்மீன்கள் ஒளி உதறுகின்றன; இரவு வந்துவிட்டது! விழித்திருந்து மற்றவர்களுக்கு இன்னல்களைத் தராதே. நீலமணிக்கு நிகரான உனது கண்மணிகளை மூடித்தூங்கு. எனது பாடல்கள் உனது செவியில் இசைப்பது போல் உனக்குக் கனவுகள் வந்து மகிழ்வூட்டும்."

மேற்கண்டவாறு தாலாட்டுக் கவிதைகளையும், இயற்கை அற்புதங்களை வருணனை செய்யும் பாடல்