பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

31

களையும், கவிக்குயில் சரோஜினி எழுதிச் குவித்தார். இந்தப் பாடல்கள் மக்கள் இடையே செல்வாக்குப் பெற்றுப் பரவின.

ஐதராபாத் நகரை விட்டு பம்பாய் வந்தார். அங்கே 'தாஜ்மகால் மாளிகை' என்ற உணவு மனையில் தங்கினார். உலகளாவிய போக்கோடும், சிந்தனையோடும், தனது பொதுத் தொண்டு பற்றியும் இலக்கியச் சேவையைப் பற்றியும் சிந்தித்தார்.

அவரது ஆழ்ந்த கவனத்துக்குப் பம்பாய் நகரமே ஐதராபாத் நகரைவிட சிறப்பாக இருந்தது. காரணம், பல நாட்டு அறிஞர்களும், வணிக மக்களும், அரசியல் பணியாளர்களும், கட்சித் தலைவர்களும் நாள்தோறும் வந்து போகும் இடமாகப் பம்பாய் இருந்ததால், அவருக்கு பிறநாடுகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பும் ஏற்பட்டது.

அதே நேரத்தில் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக உழைக்கும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களின் சந்திப்பும் நட்பும்-தொடர்பும் ஏற்பட வசதியாகப் பம்பாய் நகரம் இருந்தது.

இதனால், கவிதைகள் எழுதிய நேரம் போக, மற்ற நேரங்களில் எல்லாத்துறை நண்பர்களையும், நாட்டு நடப்புக்களையும் அறிந்திட வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார்.

பம்பாய் நகரிலே இருந்து வெளிவந்த இவரது கவிதை நூல்கள், பிறநாடுகளின் தொடர்பையும், நட்பையும் அவருக்கு உண்டாக்கியது. இவரது கவிதைப் புத்தகங்களைப் படித்து ரசித்த பன்னாட்டு அறிஞர்கள், கவிக்குயில் சரோஜினி ஷெல்லி, கீட்ஸ், டென்னிசன் போன்ற மேனாட்டுப் பெருங்கவிஞர்களது சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பாராட்டி கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார்-