பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

37

வேட்கைக்காக Home Rule என்ற சுயாட்சி இயக்கத்தை தமிழகத்திலே உருவாக்கி, வெள்ளையர்களையே எதிர்த்து போராடி சிறை புகுந்தார்.

அல்லும் பகலும் அன்னிபெசண்ட் அயர்வில்லாமல் உழைப்பதைக் கண்ட கவிக்குயில் தேவியார். அவரைப் பின்பற்றி அரசியல் தொண்டு புரிவது என்ற முடிவுக்கு வந்தார்.

சரோஜினிதேவியின் பேச்சு, மூச்சு, உழைப்பு, திறன், செயல், கவிதை, மேடைமுழக்கம் அனைத்தும் அன்னி பெசண்ட் அம்மையாரைப் பின்பற்றியே அரசியல், சமையம் ஆகிய துறைகட்கு பயன்பட்டு வரலாயின.

வழக்கம்போல சரோஜினிதேவியின் எழுத்தாற்றல் இயற்கை அழகிலும், தாலாட்டுக் கற்பனையிலும் ஈடுபடாமல் கனல்தெறிக்கும் கவிதைக் கருத்துக்களை ஏற்றிக் கொண்டு, இந்திய நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இந்த அரிய செயல்கள் யாவும் பிரிட்டிஷ் அரசுக்கு நெருப்பூட்டுவதுபோல அமைந்தது.

இந்த விடுதலை வேட்கை உணர்ச்சிகளுடன் சரோஜினி தேவி இந்தியக் கிராமங்கள், நகரங்கள், இலக்கிய மன்றங்கள், திருவிழாக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு பெண் சிங்கம் போல கர்ஜனை விட்டுக் கொண்டு நாட்டைச் சுற்றி வந்தார்.

ஒரு பெண்மணி, கவிக்குயில், கவியரசி நாடு சுதந்தரம் பெற வேண்டும் என்று பற்பல மேடைகளிலே பேசி வந்த எண்ணங்கள், புழுப் போன்ற மக்களைப் புலியாக்கிற்று; கோழைகளை வீரராக்கின என்றால் மிகையல்ல!

கச-3