பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

47

மக்களை விசாரித்து, துப்பாக்கித் தர்பார் வேட்டுகள் நடந்த இடத்தை நன்றாகச் சுற்றிப் பார்த்து, அந்த இடத்தை ஒரு படமாகவும் வரைந்து, செத்த உடல்களையும் புகைப்படம் எடுத்து மிக நுட்பமாக விசாரணை செய்து, ‘ராணுவம்தான் அராஜகம் செய்தது; பெண்களிடம் மிருகத்தனமாக நடந்தது’ என்ற கருத்துக்களை வெளியிட்டது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் சரோஜினி நாயுடு உடல்நலம் இல்லாமல் லண்டன் சென்றார்!

நடந்த கொடுமைகள் அனைத்துக்கும் ராணுவம்தான் பொறுப்பு என்ற காங்கிரஸ் மகாசபை விசாரணைக்குழு கருத்துக்களை எல்லா இந்தியப் பத்திரிகைகளும் வெளியிட்டு அதனதன் கண்டனங்களை அப்போது வெளியிட்டன.

இலண்டன் மாநகர் சென்ற கவியரசி சரோஜினி தேவி லண்டனில் இந்திய ஜிலாபத் கமிட்டியின் சார்பாக நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

பஞ்சாப் படுகொலைச் சம்பவம் மிகவும் மோசமான பழிவாங்கும் பாதகப் போக்கு என்பதை கவியரசி உணர்ந்தார். இந்த ஆவேச உந்தல்களால் லண்டன் நகரில் கிங்ஸலீ ஹாலில் நடந்தக் கூட்டத்தில் பேசுவதாக ஒப்புக் கொண்டார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு லண்டன் வந்துள்ள கவியரசி சரோஜினி நாயுடு என்னப் பேசப்போகிறார் என்பதைக் கேட்க ஆவல் கொண்ட மக்கள் திரள்திரளாக மண்டபத்துள் குழுமினார்கள்.

கூடிய அந்தக் கூட்டத்தில் சரி பாதி பேர் ஆங்கிலேயர்களே என்பது குறிப்பிடத்தக்கது. மற்றையோர் இந்திய