பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

53

ஆட்சியின் சார்பில் மன்னிப்பும் கேட்கிறேன் என்று வேண்டினார்.

இந்திய மந்திரி சிறந்த ராஜதந்திரி; அவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு சார்பாக சவால்விட்டார்.

அந்த சவாலை கவியரசி ஏற்றுத்தக்க பதில் மூலமாக வாதமிட்டார். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட களங்கத்துக்காகப் போராடினார். அந்தப் போராட்டத்தை லண்டன் மாநகரிலே, அதாவது சிங்கத்தின் குகைக்கே சென்று அதைச் சந்தித்தார்.

இறுதியாக, சரோஜினிதேவி வாதமே வெற்றி பெற்றது; கானாட்டுக் கோமகன் பிரிட்டிஷ் அரசு சார்பாக இந்திய மக்களிடமே மன்னிப்புக் கேட்டார்.


9. காந்தியடிகள் தத்துவம் கவிக்குயிலை ஈர்த்தது!

கவியரசி சரோஜினிதேவி பிரிட்டிஷ் இந்திய மந்திரி மாண்டேகு சவாலை ஏற்று வெற்றிபெற்ற பின்பு இந்திய மக்கள் அவரை ஒரு தேசியக் கவியாக மதித்துப் போற்றினார்கள்.

கவிக்குயில் பொதுத்தொண்டு, மக்கட்சேவை, ஆகியவற்றைக் காலம் திசை மாற்றியது. இதற்கு முன்பு கவி பாடியதைப் போலல்லாமல் இப்போது நாட்டின் விடுதலையைப் பற்றியும், மக்களின் அவல நிலையினைப்பற்றியும் அடுத்தடுத்து அவர் பாடிக்கொண்டே இருந்தார்.

க.ச-4