பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கவிக்குயில் சரோஜினியின்

எச்சரித்தது போல, சென்னை வெள்ளையர் அரசாங்கமும் அவரை எச்சரித்தது!

"அந்த எச்சரிக்கை அறிக்கையில், மலையாள ராணுவ ஆட்சி குறித்து நீங்கள் கூறியது எல்லாம் உண்மை அன்று: உங்களுடைய கடுமையான குற்றச் சாட்டுக்களை உடனே வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் மீது வழக்குத் தொடரப்படும்" என்று சென்னை அரசாங்கம் கவியரசிக்கு நோட்டிஸ் அனுப்பியது.

இந்த சென்னை அரசு அறிக்கையைய் பெற்றுக் கொண்ட சரோஜினி தேவி, "இராணுவம் பற்றி நான் கூறியக் குற்றச்சாட்டுகள் பொய் என்றால், அரசாங்கம் என்மீது நடவடிக்கை எடுக்கட்டும். எதற்கும் நான் தயார்; அவ்வாறில்லை என்றால், அரசாங்கம் எனக்கு அனுப்பிய வழக்கு நோட்டீசைத் திரும்பப் பெற்று என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று மறுகடிதம் எழுதினார்.

காந்தியடிகளுக்கும், மகாகவி ரவீந்திரதாத் தாகூருக்கும் அப்போது நெருங்கிய நண்பராக இருந்தவரும், தீனபந்து என்று மக்களால் போற்றப்பட்டும் புகழ்பெற்றவருமான ஆண்ட்ரூஸ் என்ற கிறித்துவப் பாதிரியார், கவியரசி சரோஜினி தேவி சாட்டியக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவைகளே" என்று ஓர் அறிக்கையினை விடுத்துக் கவிக்குயில் பேச்சை உறுதிப்படுத்தினார்.

பாதிரியாரின் இந்த மறுப்பு அறிக்கை, எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல சென்னை அரசாங்கத்துக்கு எதிரிடையாக காட்சி தந்தது!

அதே நேரத்தில் கேரளா பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபையின் தொண்டர் படைத்தலைவரான என் பீ. ஹார்டிகர் என்பவரும் சரோஜினி குற்றச்சாட்டுக்கள் உண்மையானவைதான் என்று கூறி ஓர் அறிக்கையை விட்டு ஆதரித்தார். இந்த