பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கவிக்குயில் சரோஜினியின்

இதனால் சரோஜினி தேவியிடம் ஆங்கிலேயர் அரசு இரண்டாவது தடவையாகவும் பணிந்துவிட்டது என்ற உண்மையைக் கேரளப் பகுதி மக்களும்-மாப்பிள்னை வகுப்பாரும் கண்டு புது மகிழ்ச்சிப் பெற்றார்கள்.


11. பிரிட்டிஷ் பொய்ப்பிரச்சாரம் அமெரிக்காவில் அம்பலம்!

பிரிட்டிஷ் வழக்குத் தொகுப்புப் பயமுறுத்தலையும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எச்சரிக்கைகளையும் இரண்டு முறைகள் எதிர்கொண்ட கவியரசி சரோஜினி தேவி, அந்த இரு தடவைகளிலும், பிரிட்டிஷாரின் அச்சுறுத்தல்களைத் தவிடு பொடியாக்கி வெற்றி கண்டார்.

அதற்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி அமெரிக்காவிடம் பல உதவிகளைப் பெறவும், அதே நேரத்தில் உலகம் நம்பும்படியாகவும், இந்தியாவிலுள்ள மக்களுக்கு பல நன்மைகளைச் செய்து வருவதாகப் பொய்ப் பிரச்சாரங்களைச்செய்து வந்தது.

இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் ஆதரவாளர்களைக் கைக்கூலிகளைப் போலப் பயன்படுத்தி ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்து, "பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்கள் வளமாகவே வாழ்கிறார்கள்" என்ற உண்மையற்ற நம்பிக்கைகளை உலகுக்கு வழங்கி அரசியல் பித்தலாட்டங்களைப் புரிந்து கொண்டிருந்தது.

அந்த பொய்ப் பிரச்சாரங்களைத் தகர்த்தெறியும் கடமை காங்கிரஸ் மகா சபைக்கு உண்டல்லவா? அதனால் காங்கிரஸ், லாலாலஜபதிராய், டாக்டர்