பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கவிக்குயில் சரோஜினியின்

தொடர்புகள், உணர்ச்சி வயப்பட்டு அவர் பேசும்போது, ஏற்படும் ஏற்றத்தாழ்வான குரல் ஒலிகள், அனைத்தையும் கண்டு இந்தியரும்-வெள்ளை இனத்தவரும் வியப்படைந்தார்கள். அதே நேரத்தில் ஆங்கிலேயரை இந்த அம்மையார் எப்படியெல்லாம் குற்றம் கூறுவாரோ என்ற பயமும் வெள்ளையரிடையே உருவானது.

நேடால் என்ற நகருக்கும் சென்றார் சரோஜினி! அந்த நேரத்தில் இந்தியர்களின் உரிமைகளைப் பறிக்கும் மசோதா ஒன்று சட்டமன்றத்திலே விவாதத்தில் இருந்தது. இந்தியர்கள் மிக நெருக்கடியான ஒரு துன்பச் சூழலிலே அப்போது அங்கே வாழ்ந்து வந்தார்கள்.

இந்திய பெருமக்களே! எதற்கும் அஞ்சாதீர்! நீங்கள் நடத்த இருப்பது உரிமைப்போர். தைரியமாக, துணிவாக, சிங்கம்போல் சிலிர்த்து எழுந்து கர்ஜனையிட்டும் போரை நடத்துங்கள்.

அடக்கு முறைகள் அலைகளைப் போல திரண்டு, புரண்டு வந்தாலும் அஞ்சாதீர்கள். தளர்ச்சியே இல்லாமல் கட்டுப்பாட்டுடன் போராடுங்கள் இந்தியர்கள் புற முதுகு காட்டாதவர்கள் என்ற இயல்பை நிலை நாட்டுங்கள். விடுதலை வீரர்களாக நிமிர்ந்து நில்லுங்கள்; முன்னேறிப் போராடுங்கள் என்று இந்தியர்களுக்கு உரிமைப் போர் நெஞ்சுரம் ஊட்டினார்.

அமெரிக்காவிலே உள்ள இந்தியர்களைப்போல நீங்கள் அமைதியாக வாழ முடியாவிட்டாலும், அதற்காக இங்குள்ள வெள்ளையரை விரோதிகளாக நினைக்காதீர்கள். நீங்கள் இரு இனங்களும் இங்கே சேர்ந்து வாழ வேண்டியவர்கள்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் எப்படியாவது சமாதானமாக நல்வாழ்வு வாழ்ந்தாக வேண்டும். அதற்-