பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7



  • இன்றைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரத், இட்லர் முசோலினி போன்றோரது ஆட்சியை மக்கள் Tyranny ஆட்சி என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இத்தகைய ஆட்சிகளைப் பற்றிய வரலாறுகளை எல்லாம் நன்குணர்ந்த கவிக்குயில் சரோஜினி தேவி, தனது உடல்நலம் சரி இல்லாமல் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு இலண்டன் மாநகரில் உள்ள ‘கிங்ஸ்லீ’ என்ற மாமன்றத்தில் சொற்பொழிவு ஆற்றும் வாய்ப்பு ஒன்று வாய்த்தது.

அந்த நேரத்தில், பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன் வாலா பாக் என்ற இடத்தில், ஆங்கிலேயர்கள் அரசு நடத்திய ‘பஞ்சாப் படுகொலை’யைப் பற்றி மிக கோபாவேசத் தேசப்பற்றுடன் சரோஜினி தேவி முழக்கமிட்டார்.

அக்கூட்டத்தில் ஆங்கிலேயரும்-இந்தியரும் பெருந்திரளாகக் கூடி இருந்தார்கள். அந்த மாமன்ற பேச்சில் கவியரசி சரோஜினி தேவி குமுறிக் கொந்தளித்து ஆற்றிய உரையில்:

"குடிகளைக் கொடி விலங்குகள் போல் வேட்டை ஆடலாமா? நிரபராதிகளையும், நிராயுதபாணிகளையும், சுட்டேன், சுட்டேன், துப்பாக்கிகளுள் இருந்த வெடி குண்டுகள் தீரும் வரைச் சுட்டேன்." என்று போர் வெறியன் ஜெனரல் பயர் சுட்டானே! இது அராஜக ஆட்சியின் அடக்குமுறைப் போர் ஆர்ப்பாட்ட வெறி அல்லவா?”

”இது நியாயமா? பிரிட்டிஷாரின் வீரம் இதுதானா? ஆங்கிலேய ஆட்சியின் ஜனநாயகம் இதுதான் பெண்களுக்குரிய மரியாதைகளை வழங்குகிறோம் என்று கூறும் பிரிட்டிஷ் ஆரசு, பெண்மணிகளை நிர்வாணமாக்கி நிறுத்தலாமா?”

"கசையடிகளால் பெண்களைக் கதறக் கதற அடிக்கலாமா அவர்களை வீதியிலே நிறுத்திக் கற்பழிக்கலாமா