பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

73

பிரதமர் அவர்களே! நான் கூறுகிறேன் பிரிட்டிஷ் ராஜ்யமே ஒரு கூலிகள் ராஜ்யம்தான்! இன்று பிரிட்டனை ஆட்சி புரிவோரும் கூலிகளே! இன்று தொழிற்கட்சியாளர்கள் தானே அரசு புரிகிறார்கள்? அவர்கள் தொழிலுக்குக் கூலி பெறாமலா, இலவசமாகவா தர்ம சேவைகளா செய்கிறார்கள் என்று கேட்கிறேன்! கூறமுடியுமா பதில்?

தென்னாப்பிரிக்காவின் சர்வாதிகாரியான ஜெனரல் ல்மட்ஸ், இங்கிலாநதின் குடியேற்ற நாட்டு மந்திரியான 'கூலி' மிஸ்டர் தாமசின் கட்டளைக்குக் கீழ்படிகிறார்; ஆகையால் என் சகோதரர்களை ஐரோப்பியர்கள் கூலிகள்" என்னும் அந்தப் பெயர் இங்கிலாந்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு மிகப் பொருத்தமானது.

எதிரிகளின் ஆயுதத்தைப் பறித்து, அதனாலேயே அவர்களை அடித்து வீழ்த்துவது சிறப்பான ஒரு போர்க்கள வியூகம் இல்லையா! அத்னையே கவியரசி சரோஜினி தேவி அன்று ஜெனரல் ஸ்மிட்ஸ் முகம் தொங்கும்படி ஆணித்தரமாகப் பதில் கூறினார்.

பிரதமர் ஜெனரல் ஸ்மட்சுடன் நடைபெறும் வாக்குப் போரை மக்கள் ஆரவாரமாக வரவேற்றுக் கையொலிகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்!

கவிக்குயிலின் கடுமையான சொற்பிரயோக வாக்குப் போரைக் கேட்ட மற்ற ஆங்கிலேய அதிகாரிகள், அன்று முதல் இந்தியர்களைக் கூலிகள் என்று அழைக்கவே கூச்சப்பட்டார்கள் நிறுத்திக் கொண்டார்கள்!

தென்னாப்ரிக்காவில் இவ்வாறு கடும் மேடைக்களம் கண்டு வரும் கவியரசியின் சம்பவங்கள் ஒவ்வொன்றும் அன்றாடம் காந்தியடிகள் காதுக்கு எட்டின. நாயுடுவின் இந்த வீரவுரைப் பேச்சுக்கள் தென்னாப்ரிக்காவில் மட்டுமன்று; இந்திய மக்கள் இடையேயும் வீர உணர்ச்சிகளை எழுப்பியபடியே இருந்தன. ஆனால், வாக்குப் போர்