பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

79

கொண்ட அயல்நாட்டு இந்தியர்களுக்கும் அந்த தத்துவங்கள் பயன்படப் பாடுபடவேண்டும் என்று மகாசபை மக்களை அழைக்கின்றேன்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முப்பெரும் ஜனநாயகத் தத்துவங்களை கவியரசி சரோஜின் தேவி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கனவு கண்டார். சுதந்திரம் நமக்கு வந்து ஐம்பதாண்டுகள் ஆகின்றன. இன்னும் சரோஜினி அன்று கண்ட கனவு கனவாகவே கலையாமல் இருக்கின்றது.


14. சிறைக் கூண்டில் கவிக்குயில்

கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகாசபை மாநாட்டிற்குக் கவிக்குயில் சரோஜினி தேவி தலைவராகப் பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவின் விடுதலைக்கான செயல்களில் அயராது பாடுபட்டு உழைத்து வந்தார்.

காந்தியக் கருத்துக்களைச் சுமந்து கொண்டு அவரது பாடல்கள் ஒவ்வொன்றும் வெளிவந்துக் கொண்டிருத்தன. மக்கள் இடையே அந்தப் பாடல்கள் பரவி சரோஜினி தேவிக்குப் பெரும் புகழையும், செல்வாக்கையும் உண்டாக்கின.

இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில், அவருடைய கீதங்கள் அனைத்தும் தொகுத்தப் புத்தகங்களாக வெளிவந்தன!