பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

9

ஏற்பட்டு, இந்தியர்களின் கொந்தளிப்பான மன எழுச்சிகளைப் பார்த்து, இந்தியர்க்கு ஆறுதலாக நடந்ததை மறந்து விடுங்கள்; பிரிட்டிஷ் ஆட்சியின் சார்பில் நான் மன்னிப்புக் கேட்கிறேன்" என்று மன்னிப்புக் கேட்டார்.

ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் இடையே ஒரு கருவி இருந்தது. அதற்கு ‘பூமரெங்க்’ என்று பெயர் அது மரத்தால் செய்யப்பட்ட ஒரு வளையம். அதன் முனைப் பகுதி வளைவுடையது. எந்த இடம் நோக்கி அதை வீசுகிறார்களோ, அங்கே சென்று எதிரியைத் தாக்கிவிட்டு மீண்டும் அந்த வளையம் வீசியரிடமே வந்து சேரும். இதற்குத்தான் Boomarang என்று ஆங்கிலத்திலே கூறுவார்கள்.

அந்த கருவி போல், பிரிட்டிஷ் மந்திரி வீசிய பூமரெங்க் கருவியை, சரோஜினி மீது 'பொய்க்குற்றச் சாட்டு' என்று கூறி ஏவினார்! சரோஜினி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதும், அதே கருவி மீண்டும் அந்த மந்திரியையே திருப்பித் தாக்குவதைப் போல, கானாட்டுக் கோமகன் இந்தியா வருகை தந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், சரோஜினி தேவியை அது தாக்காமல் திரும்பி, பிரிட்டிஷ் மந்திரி மாண்டேகுவையை திருப்பித் தாக்கியது.

பிரிட்டிஷ் அரசிடம் சரோஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் இந்திய மந்திரி மாண்டேகு. ஆனால், அதற்கு மாறாக, இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டது பிரிட்டிஷ் அரசு இந்த சாதனையில், ‘பூமரெங்’ என்ற பிரிட்டிஷ் மந்திரிகணையே சரோஜினி தேவியிடம் தோல்வி கண்டது; வெற்றி தேவிக்குத்தான் கிடைத்தது!