பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

93

மரணம் என்பது என்ன? எனை ஈன்ற தந்தையார் மகாத்மா மாண்டார்; "பிறப்பு உண்டு; இறப்பு இல்லை; சத்தியத்தை நோக்கிப் படிப்படியா உயிர் முன்னேறுவதே வாழ்க்கை" என்று காந்தியடிகள் உயிர் மறையும் முன்பு கூறினார்.

மகாத்மாவின் ஊனுடல் நேற்று நீராயிற்று; ஆனால், அவர் சாகவில்லை, அக்காலத்தில் இயேசுபிரான் உயிர் மீண்டு எழுந்து வந்துவிட்டார்.

மக்கன் புலம்புவதைக் கேட்டு உள்ளம் உருகி, வழி நடத்தும்படி உலகமே கோரியற்கு ஏற்றவாறு அவர் மீண்டும் தோன்றிவிட்டார்.

தில்லியில், அரசர்கள் பலர் துஞ்சிய இடத்திலேயே மகாத்மாவின் உடலும் தகனம் செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், அவர் அரசர்களின் அரசர்; சத்தியமே வடிவானவர். பெரும் வீரர்களுக்குகந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டதும் மிகப் பொருத்தம்; ஏனென்றால், அவர் வீரர்களின் வீரர்.

என் தலைவரின், என் குருநாதரின், என் தந்தையாரின் ஆன்மா அமைதி பெறாமல் இருக்குமாக! என் தந்தை ஓய்வு கொள்வதை அவர் விரும்பமாட்டார்.

எந்தாய்! தங்கள் மக்கள், வாரிசுகள், மாணவர்களாகிய நாங்கள் உங்களை வேண்டுகிறோம்; எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருளுங்கள்.

இன்றுவரை தோன்றிய இந்துக்களிலே மிகச் சிறந்த வரும், இந்துமத உண்மைகளையும், கடமைகளையும் கைக்கொண்டவருமான ஒரு மகான் அரசியல்யோகி! ஓர் இந்துவின் கையால் கொல்லப்பட்டது எவ்வளவு வருந்தத்-