பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கவிக்குயில் சரோஜினியின்

பிறப்பினர் உதவியோ இல்லாமையால், கற்றக் கல்வியை வளர்த்துக் கொண்டு வேறு ஒரு நாட்டுக்கு வந்து, தியாசாபிகல் சொசைட்டியின் முழு ஆதரவோடு அதன் தலைவியாகி இந்திய அரசியலிலே பெரும் செல்வாக்குப் பெற்றார் பெண் இன முன்னேற்றத்துக்கும் உழைத்தார்.

ஆனால், சரோஜினி தேவி மேற்கூறிய அவ்வளவு ஆதரவுகளும் இருந்தும் கூட. அவற்றை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, பெண் இன முன்னேற்றத்திற்காகவும், தேச சேவைக்காகவும், மக்கள் தொண்டுக்காகவும் பாடுபட முன் வருவோர் ஓரிருவராகவே இருக்க முடியும். அவர்களில் ஒருவர் சரோஜினி. விடா முயற்சியோடு அவர் பலதுறைகளில் ஈடுபட்டு பெற்ற வெற்றியும் புகழும் தாய்க்குலத்தை மேம்படுத்தும் எண்ணமல்லவா?

03-ம் ஆண்டு, சரோஜினி தேவியார், தனது இருபத்து நான்காவது வயதில் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மாணவர்கள் மத்தியிலே ஓர் உரையாற்றினார். அந்த பேச்சில் அவர் என்ன குறிப்பிட்டார் பாருங்கள்:

இளைஞர்களே! என்றார்! இந்த பெண்ணுக்கோ வயது இருபத்து நான்கு இருந்தும் பட்டப்படிப்பு படிக்கும் பருவமுடையவர்களைப் பார்த்து "இளைஞர்களே என்று கம்பீரமாகக் குரல் கொடுத்து. மேற்கொண்டு என்ன பேசுகிறார் தெரியுமா?. இதோ அது:

"உங்கள் விருப்பும் பற்றும் உங்கள் மாகாணத்துடன், உங்கள் நகரத்துடன், உங்கள் ஜாதியுடன், ஜாதியின் உட் பிரிவுடன், உங்கள் கல்லூரியுடன், உங்கள் வீட்டுடன், வீட்டிலும் உங்கள் உறவினர்களுடன், இறுதியில் உங்களுடனே நின்று விடுகின்றன.