பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8

புலமை நலந்தோன்ற வியாக்கியான உரைகள் வகுத்தனர். பெளத்த, சைன சமயப் பெரியோர்கள் தமிழ் இலக்கிய இலக்கணத் தொண்டில் தலைப்பட்டனர். இவ்வாறாகப் பிற்காலச் சோழர்காலம் ஆட்சிச் சிறப்பாலும், இலக்கியப் படைப்பாலும், அ வி) )ெ மேம்பாட்டினாலும் சிறந்து விளங்கியது. கலிங்கத்துப் பரணி இவ் இலக்கிய காலத்தினைப் பின் வருமாறு சுட்டுகின்றது.

  • கலையினொடுங் கவிவாணர் கவியினொடும்

இசையினொடுங் காதல் மாதர் முலையினொடும் மனுநீதி முறையினொடும்

மறையினொடும் பொழுதுபோக்கி. .

இக் காலச் சிறப்பினை வரலாற்றுப் பேரறிஞர் திரு க. அ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் சோழர் காலம் தமிழர் பண்பாட்டின் பொற்காலம்' என்று போற்றுகின்றார். 8 தமிழ் இலக்கியத் திறனாய்வாளராம் திரு ஏ. வி. சுப்பிர மணிய ஐயர் அவர்கள் இக்காலப் பகுதியினைப் பின் வருமாறு குறிப்பிடுகின்றார் :

சமய எழுச்சியின் பயனாய்த் தமிழரிடம் சமுதாய உணர்ச்சி ஓங்கியது. ஆட்சி முறைகளும் திட்டங் களும் அபிவிருத்தி அடைந்தன. சமுதாய வாழ்வு சுதந்திரத்துடன் இ ய ங் கி ய து. சத்திரங்கள் சாவடிகள் எழுந்தன. கோயில்கள் தோன்றின. நமது கோயில்களைக் கல்லிலே செதுக்கிய காவியம் என்பர். பழங்கால நாகரிகத்தைச் சங்க நூல் களிலே காண்பது போல், இடைக் காலக் கலை

5. கலிங்கத்துப்பரணி, தாழிசை, 278.

6. The age of imperial Cholas (850-1200) was the golden age of Tamil culture, and it was naturally marked by the widespread practice and patronage of literature-A History of South India. p. 357.