பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9

வளத்தைக் கோயில்களிலே காணலாம். இவை களைப் போன்ற மகத்தான கல் கட்டடங்கள் உலகிலே வேறு எந்த நாட்டிலும் இல்லை. சிற்ப நூலின் அற்புதமாய் அவை திகழ்கின்றன. இவை களை எளிதிலே ஆக்கக்கூடிய ஆற்றலைப் பெற் றிருந்த மூதாதையரது சமயப் பற்றைப் போற் றாமல் இருக்க முடியாது.' சோழர் காலத்தில் தமிழகப் பண்பாட்டு வளர்ச்சியினை ஆய்வாளர் ஒருவர் தாம் வரைந்த ஆய்வேட்டில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

- மனித சமுதாயம் அனைத்தையும் தழுவிய முறையில் சோழர்கள் பண்பாடு பரவி நின்றது. அறிவு, கலை, சமயம், நீதி, சமூகம், ப்ொரு ளாதாரம், அரசியல் முதலான அனைத்துத் துறை களிலும் பண்பாடு விளங்கிற்று. மனிதனின் மனமே பண்பாட்டின் உறைவிடம் என்பதனைக் கண்டனர். எனவே எதிர்காலத் தலைமுறை களுக்கு வியக்கத்தகு பண்பாட்டு நிலையினைத் தந்து விட்டுச் சென்றனர். 8

7. கல்வியிற் பெரியர் கம்பர், பக்கங்கள் 16.117.

8. Thiru S. R. Krishnamurti-A study of the cultural developments in the Chola period-‘‘Culture had a wide and comprehensive significance for the Cholas, covering as it should, the entire field of human activity intellectual, aesthetic, spiritual, moral, social, economic and political. They would appear to have realised and appreciated the dictum that the seat of culture is the mind of man. It was this understanding that enabled

them to leave such a wonderful heritage to posterity.’” p. 15. -