பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12

  • தேனுந்து மலர்ச்சோலைத் திருமணவூர்ச் சிவசங்கத் தோனந்தச் சிற்சபை எம் கூத்தனருட் கூத்தனெனும் ஆனந்தச் செல்வகின தாசனத்தில் அலகுபெறின் நானந்தச் செனனமுனை நயந்திரத்தல் என்கடனே.'

மேலும் சிலர் கூத்தர் வாழ்ந்த ஊர் இன்று பூந் தோட்டம் ரயிலடிக்கு அருகில் உள்ள கூத்தனுாரே என்பர். இவ்வூர் சோழ மன்னரால் இவருக்கு முற்றுாட்டாக வழங்கப்பட்டது என்பதற்கு ஆதார்ங்கள் காணலாம். மேலும் கூத்தரே முன்நின்று இவ்வூரில் சரசுவதி தேவிக்குக் கட்டிய கோயில் ஒன்றும் நன்னிலையில் உளது.

பெயர்

இவர் பிறந்த குடியின் காரணமாக இவருக்குக் கூத்த முதலியார் எனும் பெயர் வந்தது என்பர். இருவேறு பாக்கள் தம்முள் ஒட்டிவ்ரப் பாடிய சிறப்பினால் ஒட்டக் கூத்தர் என்று பெயர் பெற்றார் என்று சிலரும், பந்தயம் (ஒட்டம்-பந்தயம்) வைத்துப் பாடுவதில் பெயர் பெற்ற வராதலால் ஒட்டக்கூத்தர் எனப் பெயர் பெற்றார் என்று வேறு சிலரும் கூறுவர். விக்கிரம சோழன் தன் மீது இயற்றப்பட்ட உலாவில் வரும்

கையும் மலரடியும் கண்ணும் கனிவாயும் செய்ய கரிய திருமாலே'

என்ற கண்ணியை ஒட்டிப் பாடும்படி புலவரைக் கேட்டுக் கொள்ள,

-வையம் அளந்தாய் அகளங்கா ஆலிலைமேற்பள்ளி வளர்ந்தாய் தளர்ந்தாளென் மான் என்று அவ்வாறே விரைந்து ஒட்டிப் பாடி முடித்துக் கொடுத்ததனால் ஒட்டக்கூத்தர் என வழங்கப் பெற்றார்

9. விக்கிரம் சோழனுலா, கண் ணி, 158.