பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14

பட்டப் பெயர்கள்

இ வ. ரு க் கு க் கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, சக்கரவர்த்தி, காளக்கவி, கெளடப் புலவர், சருவஞ்ளு கவி என்னும் பெயர்கள் வழங்கின. கவிராட் சசன்

சோழ மண்டல சதக மேற்கோள்பாடல், இவரைக் கவிராட்சசன் என்று குறிப்பிடுகின்றது.

புதுவைச் சடையன் பொருங் து சங்கரனுக்கு உதவித் தொழில்புரி ஒட்டக் கூத்தனைக் கவிக்களி றுகைக்கும் கவிராட்சதன் எனப் புவிக்குயர் கவுடப் புலவனும் ஆக்கி

எனக் கூறுதலால் உணரலாம். கவிராட்சதன் என்பதால் இவருடைய கவிப் புலமையின் ஆழம் பெறப்படும்.

கவிச்சக்கரவர்த்தி

இப் பட்டம் பெற்ற கவிஞர் மூவர். 1. கம்பர், 2. ஒட்டக்கூத்தர், 3. செயங்கொண்டார் என்போர்.

தக்கயாகப் பரணியில் வாழ்த்துப் பகுதியில்,

ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே கோக்குங் தமிழ்க்கொத் தனைத்தும் வாழியே கூத்தன் கவிச்சக்கர வர்த்தி வாழியே

வாழி கவிச்சக்கர வர்த்தி கூத்தனே ?

எனவரும் அடிகளால் இப்பெயருண்மை விளங்கும். கவியரசர்களில் பேரரசராக இவர் புகழ்பூத்துச் சிறந்தமை யால் இவ்வாறு பாராட்டப் பெற்றார்.

11. சோழமண்டல சதகம், 93 மேற்கோள். 12. தக்கயாகப் பரணி. தாழிசை 813. 13. + 1 914.