பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19

இச் சாதியார் எத்தனையோ கோயில்களை எடுப்பித்தனர். கச்சியுள் ஆண்ட பல தொண்டை மான்கட்குத் துணையாகப் போந்து பல போர் களில் வெற்றி கொண்டனர். இவர்களின் வீரச் செயல்களின் வீரர்கள் பலரிருந்து மேம்பட்டனர் களென்பதும் அவர்களது பெயர்களைக் கொண்டே உணரலாம். அவர்களுள் ஊன் புசிக்காது துய்மை யாக இருந்தவர் பல்லோர்கள். அ வ ர் க ள் இடையில் மேற்கொண்ட தொழில்களுள் நூல் நூற்றல், ஆடையாக்கல் முதலிய செய்திகளினா லேயே அவர்களது பாவச்செயல் இன்மையாகிய விருத்தியைப் புலப்படுத்தும். அவர்கள் பழந்தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவர்களென் றெண்ணு தற்குச் சான்றாக இன்றும் தங்கள் தமிழாசிரியர் களிடத்திலேயே பல சடங்குகளையும் நடத்திக் கொள்ளுகின்றனர். பிற்காலத்தும்கூட இவர்களது ஆட்சியில் அரும்பெருங் கோயில்கள் அகப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றுள் கச்சி வேளுக்கைத் தண்காக் கோயிலும், கச்சிக் கச்சாலையுடைய நாயனார் கோயிலும், கச்சி மேற்றளியும், கச்சிப் பஃறளியும் இன்னும் பலவாம்.

காலம்

தமிழ்ப் புலவர்கள் பலரின் கால ஆய்வு, அடிமுடி

தேடிய ஆய்வுபோல மலைப்பாய்வாக உள்ளது. இவ் வாய்வில் ஐயம் தெளிவுறக் காலம் தெரிந்த ஒரே புலவர் _க்கூத்தர். இவர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன், ஆகிய மூவேந்தர் காலத்தும் வாழ்ந்தவர். இம்மன்னர்கள் காலம் கி.பி. 1118.1163. எனவே கிபி 12-ஆம் நூற்றாண்டில்

வாழ்ந்த முதுதமிழ்ப் புலவர் ஒட்டக்கூத்தர் ஆவர்.