பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22

பொதுப் பெயரால் வழங்கப் பெறுகின்றன. இம் மூன்றும் தம்மைப் பேணிய ஒரு குலத்து வந்த மூவேந்தரைப் பற்றியன. சோழர் வரலாற்றிற்குரிய அகச்சான்றுகள் நிறைந்த கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பெட்டகம் இது. சோழர் வரலாற்றில் இருள்நிறைந்த பகுதிகளை இவ்விலக்கிய விளக்குகளே தெளிவாகக் காட்டின. இதனைத் தமிழுலகுக்கு வழங்கிய பெருமை தமிழ்த்தாத்தா உ. வே. சா. அவர்களைச் சாரும்.

(ஆ) தக்கயாகப் பரணி

பதினொரு உறுப்புக்களையும் 814 தாழிசைகளையும் கொண்ட தாய்ப்பரணி. வீரப் பரணிகளின் போக்கை மாற்றிய புதுப்பரணி. இதற்கு அரிய உரை உள்ளது. இதனையும் நமக்கு அளித்தவர் டாக்டர் உ. வே. சா. அவர்களே.

(இ) இராமாயண உத்தரகாண்டம்

இராமாயணம் உத்தரகாண்டம் கம்பர் பாடினார் என்று கூறுதல் ஏற்புடைத்தன்று. கரைசெறி காண்டம் ஏழு என்னும் தனிப்பாடல், இராம காதை ஏழு காண் டங்கள் உடையது என்றும், இவற்றைப் பாடியவர் கம்பரே என்றும் குறிக்கின்றது. ஆனால் நடையால் உத்தர காண்டத்திற்கும் ஏனைக் காண்டங்களுக்கும் வேறுபாடு காணப்படுகின்றது. மேலும் யுத்த காண்டத்தின் இறுதிப் பகுதி, இராமன் அயோத்திக்குத் திரும்பி வந்து முடி புனைந்த செய்தியையும், இராமன் அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பிய செய்தியையும் கூறுகின்றது. இவ் வமைப்பில் யுத்த காண்டத்துடன் இராமகாதை முற்றுப் பெற்றது என்பது போதரும். எனவே அதன்பின் கம்பர் உத்தர காண்டம் பாடினார் என்றல் ஏற்புடைத்தாகாது.

ஒட்டக்கூத்தர் கலை மகளின் அருள் பெற்றவர். ஆதலால் இவருக்கு வாணிதாசன் என்ற பெயரும் உண்டு. இப்பெயரே இவர் உத்தரகாண்டம் பாடினார் என்ற