பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23

செய்திக்கு இடமளித்து விட்டது என்று சிலர் கருதுவர். அவர்கள்_கருத்துப்படி உத்தரகாண்டம் பாடியவர் வாணியன்தாசன் என்ற புலவர். இப்பெயர் மருவி, வாணிதாதன் என ஆயிற்று. பின் ஒட்டக்கூத்தருக்கும் ப்ெபெயர் இருத்தலால் ஒட்டக்கூத்தரே உத்ரகாண்டம் பாடினார் என்ற நிலையை ஏற்படுத்தியது என்பதாம். விநோதரச மஞ்சரி எழுதிய அட்டாவதானம் வீராசாமி _டியார், ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் பாடினார் ாண்பதற்குச் சுவையான கதையும் எழுதியுள்ளார். இக் தை, கம்பரையும் கூத்தரையும் இணைக்கின்றது. எனவே புது சான்றற்ற பொய்க்கதை என முடிவு செய்வர்.

ஒட்டக்கூத்தருடைய பிற நூல்களின் நடைக்கும் _த்தாகாண்டத்துக்கும் நிரம்ப வேறுபாடு உண்டென்று சொல்கிறார்கள். உண்மை. பிற்காலத்தில் சக்கரவர்த்தி _ளுடைய அவைப் புலவராகப் பெருஞ் சிறப்போடு வாழ்ந்த காலத்தில் இவர் பாடிய பாடலின் பெருமித நடைவேறு; _வாக்களிலும் பிள்ளைத் தமிழிலும் தக்கயாகப் பரணி யிலும் இதை நன்றாய்க் காணலாம். ஆனால் இளமை ஒர் ஆதரவுமின்றி வாழ்க்கையில் முன்னேற வழி தேடிக் கொண் டிருந்த இளம்புலவருடைய நடைவேறு. இந்த இளம்புலவர் பிறப்பான இந்நூல் செய்தார் என்பதை அறிந்தே விக்கிரம சோழன் இவரைத் தனது அவைப்புலவராக ஆக்கிக் கொண்டான் இவ்வாறு விளக்கம் செய்து உத்தர காண்டம் எழுதியவர் ஒட்டக்கூத்தரே என நிலைநாட்டு பவர் திரு. மு. அருணாசலம் அவர்கள்."

(n) குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்

இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது பாடப் பெற்றது. இச்சோழன் மீது உலாவும் பாடியுள்ளார். இந்

24. தமிழ் இலக்கிய வரலாறு. 12-ஆம் நூற்றாண்டு ப. 442.