பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25

இப் பிள்ளைத்தமிழில், பாடற் பெரும்பரணி தேடற் கருங்கவி கவிச்சக்கர வர்த்தி பரவ என வரும் அடிகளால் இவர் பரணி" நூலொன்றும் பாடினார் என அறியலாம்.

2. மறைந்த நூல்கள்

கலிங்கப் பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக் கோவை, எதிர்நூல் என்பன.

ஆ_கலிங்கப்பரணி

ஒட்டக்கூத்தரை முதன்முதல் போற்றிய மன்னன் விக்கிரம சோழன். இவன் தந்தை முதற் குலோத்துங்கச் சோழன் கலிங்கத்தில் பெருவெற்றி பெற்றான். இதனைப் பாராட்டிச் செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி பாடிப் பெருவெற்றி கொண்டார். தந்தை போலவே விக்கிரம சோழனும் தென் கலிங்கத்தை வென்றான். இவ் வெற்றியைப் பாராட்டிச் செயங்கொண்டார் பரணி ஒன்று பாடினார். இப் பரணி இப்போது கிடைக்கவில்லை. _ஆனால் இவர் பாடினார் என்பதற்குப் பல சான்றுகள் _ள்ளன.

விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப்

பெரும்பரணி கொண்ட பெருமாள்-தரும்புதல்வன்

கொற்றக் குலோத் துங்கச் சோழன் (28-29)

_ குலோத்துங்க சோழன் உலாவிலும்,

பகவான் வளைத் தெழுகலிங்கமும் விழுங்கப்

பகட்டணி துணித்தொரு பெரும்பரணி கொள்ளுஞ் சேவகன் அபங்கன் அகளங்கன் மதலாய்! நின்

சேவடிக ளால் எமது சிற்றில் சிதையேலே. _i ) இராசராச சோழன் உலாவிலும் ஒட்டக்கூத்தரே

1. |றி யுள்ளார்.

25. குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், 14.2.